Saturday, December 15, 2012

இதுதான் உலகின் மிக விலை உயர்ந்த ஆடையாம்!

வைரம் மற்றும் தங்கத்தினால் ஆன உலகின் மிக விலை உயர்ந்த உடை உக்ரைன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடையில் மொத்தம் 50 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை 2 காரட் தரத்திலானவை. மொத்தம் 13 கிலோ எடையில் இந்த உடை உள்ளது. விலை 5.7 மில்லியன் டொலர்களாகும்.  இங்கிலாந்தை சேர்ந்த டெப்பி விங்காம் என்பவர் இந்த உடையை வடிவமைத்து, உக்ரைனில் நடந்த பேஷன் வார நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தினார். ஆறு மாதங்கள் வரை கையாலேயே இதை நெய்தும், தைத்தும் உருவாக்கியுள்ளார் டெப்பி. கேட் வின்ஸ்லெட், ஹில்லாரி ஸ்வாங்க், அமி ஸ்மார்ட், கேத்தரின் ஜென்கின்ஸ், ரெபெக்கா பெர்குசன் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களின் பேஷன் டிசைனராக டெப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment