* பெண்களுக்கு மட்டும் தான் பண்பாடு' கலாச்சாரம்

பெண்களுக்கு மட்டும் தான் பண்பாடு' கலாச்சாரம்
எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும், தாலியும், உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?
ஆனால் பட்டிமன்றங்களும், பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன.
ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம்.
அவனுக்குத் துணை தேவையாம். ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள்.
ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள்.
தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.
முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப்பட்ட அடாவடித்தனங்கள் களையப்பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப்பட வேண்டும். கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா?
அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா? சில விஷயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க நம்மிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.
Posted by Mohammed Safran at 10:02 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
* குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!

குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!
தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.
வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!
பொறுப்புணர்ச்சி
குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.
மகிழ்தல்
குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.
குழந்தைப்பருவம்
குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.
புதிய பந்தம்
குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.
வாழ்க்கையின் புதிய கோணம்
குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மன அழுத்தம்
குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.
உறவு
குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.
முதுமையில் பலம்
வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.
நம்பிக்கை
வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.
Posted by Mohammed Safran at 9:04 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Thursday, June 6, 2013
* பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆண் நண்பர்கள்

பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆண் நண்பர்கள்
பழகும் போதே மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்! பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது.
பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள். பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக ஆரம்பிக்கின்றனர்.
சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.
இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.
நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போது தான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.
நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது.
கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) பாய்பிரண்ட் வேறு கேள் பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது.
இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை ஏற்படுகிறது.
இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள். பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை.
மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான்.
அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.
Posted by Mohammed Safran at 2:56 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
* பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அன்பின், சினிமா தாரகைகளின் புகைப்படங்களையும் தமது சொந்தப் புகைப்படங்களையும் பாவிக்கும் சகோதரிகளுக்கு,
பரந்து விரிந்த இணையத்தளத்தில் உங்களை பிரதி நிதித்துவப்படுத்துவதே உங்கள் புகைப்படங்கள் தான்…
அது ஒரு புறம் இருக்க ஒரு சில கேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.!!
…
முதல் பார்வையிலேயே உங்களைப்பற்றி எந்த வகையான சிந்தனையை அடுத்தவர் மனதில் ஏற்படுத்த விரும்புகின்றீர்கள்????
நீங்கள் வியர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காமல் தம் உடலை வைத்து சம்பாதிக்கும் ஒரு வெட்கம் கெட்ட கூட்டத்தின் ரசிகை என்பதை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றீர்களா??
உங்களுக்கு என்ன பெருமை அவர்களின் புகைப்படங்களை பாவிப்பதன் மூலம் வருகின்றது???
உங்களையும் அந்த வெட்கம் கெட்ட கூட்டத்தின் ஒருவராக பிறர் எண்ணிக்கொள்ள அனுமதிப்பீர்களா??
சொந்தப் புகைப்படங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பரப்படுத்திக்கொள்ள முனைகின்றீர்களா??
நீங்கள் அடுத்தவரால் விரும்பப் படவேண்டும் என்று விரும்புகின்றீர்களா??
உங்களைப்பற்றி மிகையாக எடை போட்டாலும் தவறில்லை குறைவாக எடை போடக்கூடாது என்று நினைக்கின்றீர்களா??
உங்கள் குறைகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை பிறரால் புகழப்பட வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா??
அப்படியும் இல்லை என்றால் இனையத்தின் மூலமாக ஆபாசமான தளங்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்ப நீங்களே வழி செய்கின்றீர்களா?
எது எப்படியோ.. face book மூலம் உங்கள் புகைப்படங்கள் வேறு தளங்களில் உலா வர வாய்ப்புக்கள் அதிகம் என்பது உண்மையே..
இதோ சில வழிமுறைகளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்கள்..
1) உங்கள் புகைப்படங்களை யாருக்கெல்லாம் காட்ட நினைக்கின்றீர்களோ தனியாகக் காட்டிக்கொள்ளுங்கள்.. பொது இடங்களில் பாவித்து பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள்…
2)பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல என்பதை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..
நீங்கள் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம் எனவே சிந்தித்து முடிவெடுங்கள்..
3) நீங்கள் இஸ்லாம் கூறும் வகையில் உடையமைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எந்தளவு நன்மை விளைகின்றதோ அந்தளவு தீமையும் மனித சமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது..
உங்கள் புகைப்படங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்…
4)உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது பல வழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..
1 உங்கள் தந்தையிடம் தாயிடம் காட்டலாம்.
2 சகோதர சகோதரிகளிடம் காட்டலாம்
3 உங்கள் கற்பை மஹர் மூலம் ஹலால் ஆக்கிக் கொண்ட உங்கள் கனவரிடம் காட்டலாம்
உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (கணவன்)இருக்க யாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்.
கணவனுக்காக அழங்கரித்து அவரை மகிழ்விப்பதற்கே நன்மைகள் கிடைக்கும் என்றிருக்க பாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??.
நீங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் உங்கள் புகைப்படங்களையும், சினிமா நடிகைகளின் படங்களையும் தவிர்த்து இன்னும் எத்தனையோ வகையான படங்கள் உள்ளன அவற்றில் ஒன்றைப் பாவித்துக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் உங்கள் பெயரை புகைப்படமாகப் பாவியுங்கள்.
தயவு செய்து முஸ்லீம் பெயர்களுடன் + இறை நிராகரிப்பாளர்களின் புகைப்படங்களை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.
இஸ்லாமிய ஆடைகளைப் பயன்படுத்திக்கொண்டு (face book) துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.
நீங்கள் பாவிக்கும் புகைப்படத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள். உதாரணமாக ஹிஜாப் அணிந்த பெண்ணை நீங்கள் profile picture ஆகப் பாவிக்கின்றீர்கள்.. ஆனால் நீங்கள் பாவிக்கும் செய்திகளோ சினிமாவும் மார்க்கத்திற்கு முறனான விடயங்களும் தான். இது எந்த வகையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??
உங்களால் இஸ்லாத்திற்கு எந்தக் கெடுதலும் ஏற்படக்கூடாதல்லவா அதற்காத்தான் இந்த ஆலோசனைகள்..
“உங்களால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை மறக்க வேண்டாம்”…
இந்த ஆலோசனைகள் யாரது மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்…
இது ஆண்களுக்கும் பொருந்தும்.
Posted by Mohammed Safran at 2:12 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Wednesday, June 5, 2013
* ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?

ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?
ஆண்களுக்கு பெண்களை எளிதில் பிடிக்க பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர் பெண்களின் புற அழகை பார்த்து ஆண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான ஒரு கருத்து. எப்படியெனில் ஆண்கள் பெண்களின் புற அழகை ரசிக்க மட்டுமே செய்கிறார்களே தவிர, அவர்களை கவரவில்லை.
மேலும் ரசிப்பதற்கும், கவர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ரசிப்பது என்பது பார்த்த நொடியில் மட்டும் தான் இருக்கும். ஆனால் கவர்வது என்பது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். எனவே ஒரு ஆண் தன்னைப் பார்த்து ரசிக்கிறான் என்று சந்தோஷப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களை கவர என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து முயற்சி செய்யுங்கள்.
புன்னகை
ஆண்களை கவர்வதில் பெண்களின் புன்னகை முக்கிய அங்கம் வகிக்கிறது. புன் சிரிப்புடைய முகத்தையே ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சோகமாக முகத்தை வைத்திருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதில்லை. புன்னகை என்பது பெண்ணின் மிக பெரிய சொத்து. எனவே எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க தவறாதீர்கள்.
வெளிப்படையாக இருங்கள்
பெரும்பாலும் வெளிப்படையாக பேசும் பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். குறுகிய மனபான்மையுடைய பெண்களை அவர்கள் விரும்புவதில்லை. தனக்கு ஏற்பட்டசவால்களை இஷ்டத்துடன் எதிர்கொள்ளும் பெண்களாக இருக்க வேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றி பெண்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.
நம்பிக்கை
எந்த செயலையும் நம்பிக்கையுடனும் எதிலும் சுயமாக முடிவு எடுக்கும் பெண்களாக இருந்தால் ஆண்களை எளிதில் கவரலாம்.
நேர்மறை எண்ணங்கள்
எதிர்மறை எண்ணங்கள் உள்ள பெண்களால் கண்டிப்பாக ஆண்களை கவர முடியாது. ஆகவே எப்போதும் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
கவரும் வண்ணம் பேசுதல்
ஆண்களை கவர்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அவர்களை கவரும் வண்ணம் பேசுவது தான். அதிலும் அமைதியுடன் இருக்கும் பெண்களை விட, நன்கு கலகலவென்று பேசும் பெண்களைத் தான் அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும்.
Posted by Mohammed Safran at 10:27 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Tuesday, June 4, 2013
* வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற அனுபவசாலிகள் சொல்வதை கேளுங்க..............

வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற அனுபவசாலிகள் சொல்வதை கேளுங்க..............
எவ்வளவு நாள்தான் , வேலை, வீடு என்று சுற்றி சுற்றி வருவது. போராடிக்கிற மாதிரி இருக்கா? நாலு நாளைக்கு ஜாலியா ஒரு சுற்றுப்பயணம் கிளம்புங்களேன் என்கின்றனர் நிபுணர்கள். அலுவலக வேலையாக வெளியூர் போறீங்களா? பரவாயில்லை. உங்களின் துணையை அழைத்துச் செல்லுங்கள். போகும் வேலை எளிதில் முடியும் என்கின்றனர். வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற அனுபவசாலிகள் சொல்வதை கேளுங்களேன்.
அருகே இருந்தும் மவுன உரையாடல்!
வேலை, வேலை என்று சுற்றிக்கொண்டிருக்கும் போது கொஞ்சநேரமாவது நம் பக்கத்தில் அமர்ந்திருக்க மாட்டாரா என்று மனம் நினைக்கத்தோன்றும். அதே நேரத்தில் இருவர் மட்டும் தனித்திருக்கும் போது எதுவும் பேசத் தோன்றாது. அங்கே மவுனபாஷைதான். இருந்தாலும் பரவாயில்லை. ஒருவருக்கொருவர் கண்களால், மனதால் பேசிக்கொள்ளலாம். அருகே இருப்பதே மகிழ்ச்சியான விசயம்தானே. எனவே வார்த்தைகளைப் பற்றி கவலைப்படதேவையில்லை.
வெட்கத்தை விட்டுத்தள்ளுங்கள்
கூட்டுக்குடும்பத்தில் இருக்கும்போதுதான் அதிகம் வெட்கப்படவேண்டியிருக்கும். சத்தம் கேட்டுவிடுமோ, ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம், கூச்சம் எல்லாம் இருக்கும். ஆனால் வெளியிடங்களில் இருவர் மட்டும் தனித்திருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் இஷ்டம்தான் சும்மா விளையாடலாம். என்ன வேண்டுமோ? எப்படி வேண்டுமே கேட்டுப்பெற்றுங்கொள்ளுங்கள். உங்களின் மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்துங்கள்.
சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கங்களேன்
உங்கள் துணைக்கு எங்கு தொட்டால் கூடுதல் உற்சாகம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எந்த மாதிரியான உறவு பிடிக்கும் என்பது பற்றியும் ஒருவருக்கொருவர் பேசுங்கள். ஏனென்றால் வீட்டில் குழந்தைகள் தொந்தரவு இருந்தாலோ, இதைப்பற்றி எல்லாம் தெளிவாக பேசிக்கொள்ள முடியாது. அரிதாக கிடைத்திருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
அவ்வப்போது புகழுங்களேன்
அலுவலகம், வேலை என்று பிஸியாக இருக்கும் போதுதான் சரியாக கவனிக்க நேரம் இருக்காது. தனியாக பயணம் போன இடத்தில்தான் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள நிறைய நேரம் கிடைக்குமே. ஒருவருக்கொருவர் பாராட்டித் தள்ளுங்கள். துணையின் செயல்பாடுகளில் எது பிடித்தமானது என்பது பற்றி பக்கம் பக்கமாய் பாராட்டித்தள்ளுங்களேன்.
புதிதாக முயற்சி செய்யுங்களேன்
ஜாலி பயணம் போன இடத்தில்தான் இதுபோன்ற புதிய முயற்சிகள் எல்லாம் செய்து பார்க்க முடியும். தனியான சந்தர்ப்பத்தில் உங்களின் கற்பனையை கொஞ்சம் உபயோகித்து கிரியேட்டிவாக செயல்படுங்கள். உங்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஒரு வருடத்திற்குத் தாக்குப்பிடிக்கும்.
கையோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்
சுற்றுப்பயணம் போன இடத்திலும் செல்போனும், டிவியுமாக அமர்ந்துவிடவேண்டாம். அப்புறம் நீங்கள் தனியாக போய் பிரயோஜனமே இல்லை. அதை எல்லாம் சுவிட்ஆஃப் செய்துவிட்டு ஜாலியாக ஒரு வாக் போங்கள். சில்லென்ற தூரல் பொழிய கையோடு கைகோர்த்து நடப்பதே ஒரு தனி அனுபவம்தான். அதேபோல் சுற்றுப்பயணம் முடித்து திரும்பும்போதும் அந்த சந்தோச நினைவுகளை அசைபோடுங்கள். நெருக்கமான அமர்வும் கூட உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
Posted by Mohammed Safran at 7:04 AM No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
* வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்.....

வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்.....
இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். வீட்டில் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம்.. எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பெண்களைப் பொருத்தவரை கணவர்தான் அவர்களின் கதாநாயகன். எனவே இருவரும் தங்களின் விருப்பங்களை மனம் விட்டுப் பேசி தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை.
மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார். தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத்தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.
திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற்குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவதுமாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப்படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போலவும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவருமே சந்தோசமாக இருக்க முடியாது.
வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடிவமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.
No comments:
Post a Comment