Saturday, December 29, 2012

* பேஸ்புக் தளத்திலுள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்னகத்தே கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது. 
இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.

Thursday, December 27, 2012

* Flash கோப்புக்களின் Format-களை மாற்றம் செய்வதற்கு

 
அனிமேஷன்கள், கணனி கேம்கள், மற்றும் இணையப்பக்க வடிவமைப்புக்கள் போன்றவற்றில் Flash மென்பொருளானது மிகச்சிறந்த பங்களிப்பினை கொண்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் உருவாக்கப்படும் SWF கோப்புக்களை விண்டோஸ் கணனிகளில் நிறுவி பயன்படுத்தக்கூடிய EXE கோப்புக்களாகவோ அல்லது Mac Desktop கணனிகளில் நிறுவக்கூடிய கோப்புக்களாகவோ மாற்றுவதற்கு mProjector எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் Flash மற்றும் mProjector மென்பொருட்களைக் கொண்டு Widgets, Games, Branded News Readers, Screen Buddies, Autorun CD Installers, System Tray, Toaster Popup Alert போன்ற Windows மற்றும் Mac Desktop ஆகியவற்றில் செயற்படக்கூடிய Application - களையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

* YouTube தளத்தில் உள்ள வீடியோக்கள் Autoplay ஆவதை நிறுத்துவதற்கு

 
பல லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படும் முன்னணி தளமான YouTube - இல் வீடியோக்களை பார்வையிட எத்தனிக்கும் போது அவை Autoplay ஆகின்றன. 
இதனால் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உடையவர்களும், வீடியோ கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முயற்சிப்பவர்களும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இதுவரை காலமும் காணப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இத்தளத்தினை பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்படும் உலாவியில் நீட்சிகளின் உதவியுடன் Autoplay ஆவதை நிறுத்த முடியும்.
இதற்காக கூகுள் குரோம் உலாவியில் Stop Autoplay for YouTube அல்லது Stop Autoplay in Background Tabs எனும் நீட்சியினையும், Firefox, Internet Explorer, மற்றும் Opera போன்ற உலாவிகளுக்கு YouTube Auto Buffer அல்லது YousableTubeFix போன்ற நீட்சிகளையும் பயன்படுத்த முடியும்.
தரவிறக்கச் சுட்டி

Wednesday, December 26, 2012

விண்டோஸ் இயங்குதளத்தினை இடையூறின்றி செயற்பட வைப்பதற்கான மென்பொருள்


விண்டோஸ் இயங்குதளத்தினை செம்மையாக செயற்படவைப்பதன் மூலம் கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்காக IObit நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளே Advanced System care ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System care Pro 6 ஆனது Malware fighter, Registry Cleaner, Internet Booster, Disk cleaner, Game booster போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய லைசன்ஸ் கீயுடன் கூடியதாக இலவசமாக தரவிறக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
லைசன்ஸ் கீயினை பெறுவதற்கு
முதலில்  இந்த முகவரிக்கு சென்று அங்கு காணப்படும் Like பொத்தானை அழுத்தவும், தொடர்ந்து அதனூடாக உங்களுது 4 நண்பர்ளுக்கு அழைப்பு விடுத்து Get Code எனும் பொத்தானை மூலம் லைசன்ஸ் கீயினை பெறவும். 


மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

* சிந்திக்க சில தகவல்கள்



1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Tuesday, December 25, 2012

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான WinZip-யை தரவிறக்கம் செய்வதற்கு

கோப்புகளை பாதுகாப்பாக சுருக்கி அனுப்புவதற்கு பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படுவது WinZip.
மேலும் ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட்(ZipShare, ZipSend) போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.
iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான WinZip வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான WinZip வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடுதிரை செயல்பாட்டிலும், 128 or 256 Bit AES Encryption தொழில்நுட்பத்திலும் இயங்குகிறது.

கணனிகளை பாதுகாக்க அறிமுகமாகின்றது Avira Antivirus 2013

தற்போது பல்கிப்பெருகிவரும் கணனி வைரஸ் மற்றும் மல்வேர் தாக்கங்களிலிருந்து கணனிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் இவற்றில் இலவசமானதாகக் கிடைக்கக்கூடியதாகவும், நிகழ்நேர (real-time) பாதுகாப்பு உடையதாகவும் காணப்படுபவை மிகவும் சொற்ப அளவே. அவற்றில் உலகளாவிய ரீதியில் 130 மில்லியன் கணனி பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் Avira அன்டிவைரஸ் மென்பொருளும் சிறந்ததாக காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருள் Avira Antivirus 2013 எனும் பெயருடன் Viruses, Worms, Trojans, Rootkits, Wdware, மற்றும் Spyware போன்றவற்றிலிருந்து கணனிகளை பாதுகாக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது Windows 7 (32-bit or 64-bit) , Vista (32-bit or 64-bit), Windows XP SP3 (32-bit), Windows XP SP2 (64-bit) போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 


தரவிறக்கச் சுட்டி

Saturday, December 22, 2012

இணையத்திலிருந்து பல கோப்புக்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு


இன்று எமக்கு தேவையான அத்தனை விடயங்களையும் இலகுவாக பெற்றுத்தரும் அளவிற்கு இணையத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானதாகக் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இணையத்தளங்களில் இருக்கும் பல்வேறு பயனுறுதி மிக்க கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அவற்றின் உதவியுடன் பொதுவாக குறித்த ஒரு நேரத்தில் ஒரு கோப்பு வீதமே தரவிறக்கம் செய்துகொள்ள முடிகின்றது.
ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை Web Batch Downloader எனும் மென்பொருள் தருகின்றது.

Thursday, December 20, 2012

System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு...!



 
 
கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.


இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.


விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.


இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.


இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.


பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.


உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.


கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.


Download செய்ய இங்கே click செய்க :connect.microsoft.com

System Bus என்றால் என்ன...?



 
 
கணினி மதர்போர்டில்ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது.

இதனை இண்டர்னல் பஸ்(internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும்.


இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ்(address bus)டேட்டா பஸ் (data bus)என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


பஸ்ஸின் அளவை அதன (width)அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.


ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைkக்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாகஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்.

கணனி வேகமாக start செய்ய ...!



 
 
நம்ம கணனி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணனி வேகமா Boot ஆகும்.

வழிமுறைகள்:

1. நோட்பேட் (Notepad) திறந்து, “del c:\windows\prefetch\ntosboot-*.* /q” (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் “ntosboot.bat” – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.

2. Start menu போய், “Run…” செலக்ட் பண்ணுங்க, “gpedit.msc”-னு தட்டச்சு செய்யுங்க.

3. இப்ப “Computer Configuration” – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள “Windows Settings”டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, “Shutdown” – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.

4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் “add”, “Browse”-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.

5. கிளிக் “OK”, “Apply” & “OK”,

6. திரும்பவும் “Run…” வந்து, “devmgmt.msc” தட்டச்சு செய்யுங்க.

7. டபுள் கிளிக் “IDE ATA/ATAPI controllers”.

8. “Primary IDE Channel” – ல, Right click பண்ணி, “Properties” செலக்ட் பண்ணுங்க.

9. “Advanced Settings” tab கிளிக் பண்ணி, ‘none’ கொடுங்க.

10. “Secondary IDE channel”, Right click பண்ணி “Properties” போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி “OK” கொடுங்க.

11. கடைசியா உங்க கணனிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.

கணனி Device Drivers ஐ Backup எடுக்க எளிய மென்பொருள்.



கணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணனியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை.

Backup Copy இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணனியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணனியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது.


திடிரென்று கணனியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ? டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?

கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,


Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்

இவை கண்டிப்பாக உங்கள் கணனிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணனியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணனியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader. நீங்கள் புதிதாய் கணனி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.



இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.


நன்மைகள் :

1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.
2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
3. இலவச மென்பொருள்.
4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.

கண்களை பாதுகாக்க Software ?


 
 
நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewallபோன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.


அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.



பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.



நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கமுடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.




இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.


இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று


1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windows ல் locate என்பதை கிளிக் செய்து வரும் map ல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitude னை copy செய்து அதில் தரவும்.


3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

Download செய்ய இங்கே click செய்யவும் :flux

பழுதான கோப்புக்களை திருத்தும் software...!



 
 
கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான கோப்புக்கள் எதிர்பாராத விதமாக கணனி நிறுத்தப்படும் போது பழுதாகிவிடலாம். இவற்றை பழுதுபார்ப்பதற்கென File Repair என்ற software உள்ளது.

MS Word, Excel, Power Point, Access, video, audio, image Zip or RAR  DOC, DOCX, DOCM, RTF,PDF,XLS, XLA, XLSX, Zip, RAR, AVI, FLV, Mp4, MOV, WMV, ASF, MPG, JPEG, GIF, TIFF, BMP, PNG, PPT, PPS, PPTX, Mp3, WAV, MDB, MDE, ACCDB and ACCDE.


போன்ற Formatக்களைக் கொண்ட அனைத்து கோப்புக்களையும் பழுதுபார்க்கவல்லது.


Download செய்ய இங்கே click செய்க :filerepair1

தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கு இரண்டு வழிமுறைகள்.



 
 
அன்பான  வாசகர்களே நீங்கள் தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கு Google இல் இரண்டு இலகுவான வழிமுறைகள்.

(1).தரவிறக்கம் (Download) செய்து install மூலமாக எழுதுவதற்கு

இதை Download செய்யுங்கள் :Google Transliteration IME (tamil)

(2).இன்டர்நெட்டில் இருந்தபடி (online internet) எழுதுவதற்கு

இதை click செய்யுங்கள் :google transliterate (tamil)


ஹாட்டிஸ்க் பார்ட்டிஷனை இலகுவாக்க Wondershare டிஸ்க் மனேஜர்!


விண்டோஸில் ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறது Wondershareடிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copyமற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை ரீகவர் செய்யவும் முடியும்.


இதில் இருக்கும் Expert Mode ஐ தேர்வு செய்தால் Manually ஆகவும் Wizard Mode இன் மூலம் ஒவ்வொரு படிமுறையாகவும் டிஸ்கை மனேஜ் செய்துகொள்ளலாம். 



இணையதள முகவரி :  Wondershare

தொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்!



Preyproject எனும் நிறுவனம் தொலைந்து போன Laptopப்பை கண்டுபிடிப்பதற்கான மென்பொருளை ஏற்கனவே வெளியிட்டுருந்தது. கணனிகளில் செயற்படுவது போன்று நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் தொலைந்து போனால் அல்லது அதை தவறவிட்டுவிட்டால்...,


இலகுவாக கண்டுபிடிக்கும் வசதியை Iphone App மூலம் வழங்குகிறது இந்த இணையம். குறிப்பிட்ட Iphone App நிறுவிய பின்னர் அதன் மூலம் புதிய கணக்கொன்றை திறக்க வேண்டும்.


மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திய பின்னர், Prey இணையத்தள கணக்குடன் Iphone இணைக்கப்படும்.  Iphone தொலைந்து போகும் சந்தர்ப்பத்தில் அதனை GPS, GSM , WiFi போன்றவற்றை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம்.


இணையதள முகவரி : Prey

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு



நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறதுமற்றும் mac இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் personalize என்பதை தேர்வு செய்யுங்கள். அதில்installed themes என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் மூளையின் வயதை கண்டறிவதற்கு

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயது தானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த முகவரிக்கு சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி(விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும்.
முதலில் எளிதாக இருந்தாலும், போகப் போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
அடுத்த பிரிவு அடென்ஷன்(Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு மொழி(Anagrams): எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.
இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.

வைரஸ் தாக்கத்திலிருந்து கணனிகளைப் பாதுகாக்க ஒரு இலவசமான மென்பொருள்


இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக தொழிற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் செய்நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் நிகழ்நேர (Real Time) பாதுகாப்பைக் தரக்கூடிய இம்மென்பொருளிற்கான Update - களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

அச்சுப்பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கான் செய்து மென்பொருள்



தற்போதைய காலகட்டத்தில் எந்தவொரு நடவடிக்கையும் கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவற்றின் அடிப்படையில் புதிதாக வெளியிடும் பல்வேறு புத்தகங்களும் அச்சிட்டு வெளியிடுவதை குறைத்து கணினியில் பயன்படுத்தக்கூடியவாறு மின் புத்தகங்களாகவே (eBook) வெளியிடப்படுகின்றது.
அதே போல அச்சுப்பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கான் செய்து மின் புத்தகங்களை உருவாக்க முடியும். இதற்கென iReador eBook Converter எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இவை நிழற்படங்களாகவோல் அல்லது எழுத்துருக்களாகவே ஸ்கான் செய்யப்பட்ட கோப்புக்களை PDF, ePUB, Mobi போன்ற மின்புத்தக கோப்புக்களாக மாற்றியமைக்க உதவுகின்றது.
இதன் பயனர் இடைமுகமானது எளிமையானதாகக் காணப்படுவதால் பயன்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

Android Explorer: விண்டோஸ் கணனிகளில் அன்ரோயிட் சாதனங்களை இயக்குவதற்​கு

 அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களை விண்டோஸ் கணனிகளுடன் இணைத்து பணியாற்றுவதற்கு Android Explorer எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இம்மென்பொருளின் உதவியுடன் அன்ரோயிட் சாதனங்களிலுள்ள கோப்புக்களை ஒழுங்குபடுத்த முடிவதுடன், தேவையான மென்பொருட்களை நிறுவுதல் மற்றும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் HTC, Samsung, Google Nexus, Motorola போன்ற கருவிகளுக்கு இவை ஒத்திசைவாக்கம் உடையதாகக் காணப்படுவதுடன் Windows 64-bit, Windows 32-bit ஆகியவற்றிற்கென தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது எப்படி?

விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது

நான் முன் பதிவில் கூறியபடி கூகுள் ஆண்டவர் துணையுடன் விண்டோஸ் 8-ஐ டோரண்ட் வடிவில் தேடியபொழுது ஒரு சில டோரெண்ட்டுகள் கிடைத்தது. நான்
ஏன் டோரண்ட் ஃபைலை தேடினேன் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். பெரிய ஃபைல்களை சாதரணமாக டவுன் லோடு செய்வது இயலாத காரியம். 

காரணம் கரண்டு போனாலோ அல்லது இண்டர்நெட் டிஸ்கனெக்ட் ஆனாலோ, அதுவரை நாம் டவுன்லோடு செய்தது எல்லாம் டெலிட் ஆகிவிடும். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே டவுன் லோடு செய்ய வேண்டும். அதனால் சினிமா டி.வி.டி, விடீயோ போன்றவற்றை டோரண்ட் ஃபைலாக கன்வெர்ட் பண்ணி அப்லோடு செய்து விட்டால், U Torrent, Bit Torrent போன்ற டோரெண்ட் கிளையண்ட் மூலம் டவுன்லோடு செய்ய வசதி. 

நாம் கம்பியூட்டரை ஆன் செய்திருக்கும் பொழுது(இண்டர் நெட் இணைப்பு இருந்தால்) தானாகவே தொடர்ந்து டவுன்லோடு ஆகும். ஆஃப் செய்துவிட்டால், அதுவரை டவுன்லோடு செய்தது அப்படியே இருக்கும். அடுத்த முறை ஆன் செய்யும் பொழுது தொடர்ந்து டவுன்லோடு ஆகும்.

நான் U Torrent இன்ஸ்டால் செய்திருக்கிறேன். கூகுள் சர்ச்சில் கிடைத்த விண்டோஸ் 8 டோரெண்ட் ஃபைல் "Windows 8 Pro VL(x86+x64) Untouched DVD(EN) + Permanent Activator"ஆகும். அதாவது விண்டோஸ் 8 புரபொஷ்னல் - வி. எல் என்பது வால்யூம் லைசென்ஸ் என்பதாகும். இது போன்ற லைசென்ஸ் கம்பியூட்டர் தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பியூட்டர்களில் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பிரி இன்ஸ்டால் செய்வதற்கு மைக்ரோஸாப்டால் வழங்கப்படும் லைசென்ஸ் ஆகும். இந்த ஓ. எஸ்-ல் ப்ராடக்ட் கீ அதனுள்ளே இருக்கும். எனவே ஒரு டிவிடியை வைத்து எத்தனை கம்பியூட்டரிலும் இன்ஸ்டால் செய்யலாம். 

அதன் பின் இந்த கம்பியூட்டர்களை மைக்ரோ ஸாஃப்டின் ஆக்டிவேட்டர் சாப்ட்வேர் மூலம் ஆக்டிவேட் செய்யும் பொழுது, கம்பியூட்டர் கம்பெனியின் கணக்கில் அது சேர்க்கப்படும். அதன் அடிப்படையில் கம்பெனி மைக்ரோசாஃப்ட்டுக்கு பணம் கொடுக்கும். எனவே இதற்கு 25 இலக்க கீ கிடையாது.

x86,x64 என்பது 32 பிட், 64 பிட் ப்ராஸசரை குறிக்கும்.

நீங்கள் ஒரிஜினல் Windows 8 Professional -ஐ உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து பெர்மனெண்ட் ஆக்டிவேஷன் செய்ய விரும்பினால் முதலில் உங்கள் கம்பியூட்டரில் U Torrent-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய இந்த லிங்கைகிளிக் செய்து "U Torrent Stable (3.2.3 Build 28705) என்பதை டவுன் லோடுசெய்யுங்கள். இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

அடுத்தபடியாக இந்த லிங்கை கிளிக்செய்யுங்கள். Extra Torrent பக்கம் திறக்கும். அதில் Download (Download Torrent) என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ஒரு சிறிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் இருக்கும் ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள். டோரண்ட் டவுன்லோடு ஆகி வேறு ஒரு பேஜ் தோன்றும். அதில் எந்த டிரைவில் டோரண்ட் பைலை சேமிக்க வேண்டுமோ அதை மார்க் செய்து ஓகே கொடுங்கள். இனி யூடோரண்ட் பேஜ் தோன்றி அதில் விண்டோஸ்8 பைஃல் சேர்ந்து விடும். அதன் பின் அந்த பைஃல் டவுன்லோடு ஆக ஆரம்பிக்கும். இந்த பைஃலின் அளவு 2.23 ஜி.பி ஆகும். இது முழுவதும் டவுன் லோடு ஆக எப்படியும் 5-6 மணி நேரம் ஆகும். இது இண்டர்நெட் ஸ்பீடை பொறுத்தது.

டவுன்லோடு ஆகும் பைஃல் WIN RAR பார்மெட்டில் இருக்கும். நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் வின்ரேர் இண்ஸ்டால் செய்திருக்கவில்லை என்றால் இந்த லிங்கைகிளிக் செய்து என் டிராப் பாஃக்சில் இருந்து டவுலோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

டோரண்ட் பைஃல் முழுவதும் டவுன்லோடு ஆனவுடன் அதை வின்ரேர் மூலம் எக்ஸ்டிராக்ட் செய்யுங்கள். இப்பொழுது விண்டோஸ் 8 டிவிடியின் இமேஜ் பைல்,பெர்மனெண்ட் ஆக்டிவேட்டர், எப்படி இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை விவரிக்கும் வீடியோ ஆகியவை இருக்கும். 

நீங்கள் இமேஜ் பைஃலை டிவிடியில் ரைட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். அல்லது யு.எஸ்பி பென் டிரைவில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யலாம். பெண்டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் மைக்ரோசாஃட்டின் " Windows 7 USB -DVD -Tool" ஐ இந்த லிங்கை கிளிக் செய்து அதில் இன்ஸ்டலேஷன் என்ற தலைப்பின் கீழ் windows7 usb dvd download tool என்ற சிகப்பு நிற வாசகத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யுங்கள். 

பென் டிரைவ் குறைந்த பட்சம் 4 ஜி.பியாக இருக்க வேண்டும். பென் டிரைவை சிஸ்டத்தில் இணைத்துவிட்டு, டெஸ்க்டாப்பில் இருக்கும் யூ.எஸ்பி டூல் ஐகானை கிளிக் செய்யுங்கள். பேஜ் தோன்றும். அதில் கேட்டுள்ள படி யூ எஸ்பி, இமேஜ் பைல் ஆகியவற்றை தெரிவு செய்து ஓகே கொடுத்தால் விண்டோஸ் இமேஜ் பைஃல் யூ.எஸ்பியில் இன்ஸ்டால் ஆகிவிடும். 

இனி இந்த யூ.எஸ்.பியை இணைத்தபடியே சிஸ்டத்தை ரிஸ்டார்ட் செய்து பூட் மெனுவில் யூ எஸ்பி என பூட் ஆஃப்ஷனை தேர்வு செய்துவிட்டால் போதும். விண்டோஸ் 8 இன்ஸ்டால் ஆகிவிடும். அதன் பின் பெர்மனெண்ட் ஆக்டிவேட்டரை ஓடவிட்டால் ஆக்டிவேட் ஆகிவிடும். இதை தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும். 

முடிந்தது கதை............... 

Tuesday, December 18, 2012

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!

மலைப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
இதைக் கண்டெடுத்த ஆய்வாளர்களுக்கு குறித்த சிறுமியின் உடல் அதிர்ச்சி தரும் விடயமாக காணப்பட்டது. இவ்வுடல் மம்மி போன்று பதப்படுத்தப் படவில்லை .. 
ஆனாலும் தோல் இதயம் நுரையீரல் போன்ற தசைகள் உருக்குலையாது இன்னமும் காணப்படுகின்றன. 
மதரீதியாக உடலை பாதுகாக்க எதோவொரு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 
இன்கா (inca) எனும் இனத்தவர்கள் கடவுளின் கட்டளைப்படி சிறுவயதில் இறப்பவர்களை மீளாத உறக்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் போது இறந்த உடலானது இருந்த நிலையில் உறக்கத்திற்கு தயார் செய்யப்படுகிறது. 
இவர்களின் நடைமுறை எகிப்திய மம்மிகளின் உருவாக்கத்தில் இருந்து வேறுபட்டது. இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் இங்கு வாழ்ந்து அழிவடைந்த இன்கா இன மக்களின் வரலாறு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.