Tuesday, December 18, 2012

வன் தட்டில் ஏற்படும் கோளாருகளை சரி செய்வது எவ்வாறு?



வன் தட்டில் ஏற்படும் கோளாருக��
வருட கணக்கில் பயன்படுத்தப்படும் வன் தட்டுகளில் எராளமான பிரச்சனைகள் இருக்கும். விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள கணினியில் இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக காணப்படும். வன் தட்டில் மென்பொருள்களை நிறுவி உபயோகிப்போம் தேவை இல்லை யெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். 

கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கி விடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்திகளை காட்டும். வன் தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும்.

மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். 

இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். 


No comments:

Post a Comment