Saturday, December 15, 2012

சர்வதேச விண்வெளி மையம் – சிறப்புப் படங்களுடன் முழுமையான தகவல்கள்!

சர்வதேச விண்வெளி
மையம் – சிறப்புப்
படங்களுடன் முழுமையான தகவல்கள்!


பூமியிலிருந்து 300 கிமீ தூரத்தில் விண்ணில் நிலை கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998-ம் ஆண்டு இந்த நிலையத்தின் முதல் பகுதி பூமியின் தாழ் அச்சுப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.  சல்யூட், அல்மாஸ், ஸ்கைலாப், மிர் என இதற்கு முன் எட்டு விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஸ்கைலாப் கொடுத்த அதிர்ச்சி எண்பதுகளில் பள்ளி சென்றவர்களுக்கு புரிந்திருக்கும்.  ரஷ்யா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகள் கூட்டாக உருவாக்கிய மையம் இது. இங்கு நிரந்தரமாக விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.  இந்த மையத்தில் தங்கியபடி தங்களின் அடுத்த விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர் ரஷ்ய வீரர்கள். இந்த மையத்துக்கு ஓப்செக் (OPSEK) என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே ரஷ்யாவின் மிர் விண்வெளி மையம் 12 ஆண்டுகள் பணியில் இருந்தது.  இப்போது சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து நிலவுக்கும், செவ்வாய், சனி கிரகங்களுக்கும் புதிய விண்கலங்களை அனுப்பத் திட்டமிட்டு வருகின்றனர்.
















No comments:

Post a Comment