Wednesday, December 12, 2012

வெள்ளைத் தங்கத்தில் ஜோலிக்கும் பென்ஸ் கார்!

வெள்ளைத் தங்கத்தில் ஜோலிக்கும் இந்த கார் அபுதாபி நாட்டை சேர்ந்த எண்ணெய் வயல் அதிபருக்கு சொந்தமானது. பென்ஸ் எஸ்எல்எஸ் மெக்லேரன் ஸ்போர்ட்ஸ் காரைத்தான் இவ்வாறு கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வெள்ளை தங்கத்தின் சிறப்பு

தங்கத்துடன் பல்லாடியம், நிக்கல் கலந்து வெள்ளை தங்கம் உருவாக்கப்படுகிறது. மேலை நாடுகளில் இதில் ஆபரணம் செய்கின்றனர். இந்த தங்கத்தை பிரித்தெடுக்க பாதரசத்திற்கு பதிலாக பொட்டாசியம் சயனைடை பயன்படுத்துகின்றனர். தீக்குச்சி தலை அளவு வெள்ளைத் தங்கத்திலிருந்து 3 மீட்டர் நீளத்துக்கு கம்பி இழுக்கலாம்.

முலாம் பூச்சு அல்ல..!!

இந்த காரில் முலாம் பூசப்படவில்லை. வெள்ளை தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரில் 1,600 சிசி வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வெறும் 2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.

உயிரி எரிபொருளில் இயங்கும்..!

சுற்றுச் சூழல் தீங்கை குறைக்கும் உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தில் இந்த கார் இயங்கும். இதுபோன்ற பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட கார்கள் உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக கூறலாம்..





No comments:

Post a Comment