Saturday, June 30, 2012

* சிரிப்பு.....




வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

* * * * *

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஜாதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!

* * * * *

* மெளனத்தில் புதைந்த கவிதைகள்...



கம்மாக் கரையோரம்
களையெடுக்கும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்சுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதான்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின்னும் ஒம்ம
நெழல்மட்டும் போகலையே
நெஞ்சுக்குழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திருச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கிவைக்கும் அதிகாரம்

போறபோக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி
வேரோட பிடுங்கிஎன்ன
வெயில்தரையில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

* * * * *
பச்சி ஒறங்கிருச்சு
பால், தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட்டி தாருமய்யா

* * * * *

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்யா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டுப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத் தீருமய்யா

* * * * *
ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச்சுத் தாருமய்யா

* * * * *
உள்நெஞ்சுக்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிருக்க
எங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன்
எத்தனையோ பெண்தலையில்
இப்படித்தான் எழுதிருக்கோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?

* * * * *

* சிறுமியும் தேவதையும்...



திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

* * * * *

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

* நண்பா உனக்கொரு வெண்பா....



ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!

* இது போதும் எனக்கு...



அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?


                                                                                    
எழுதியவர் :வைரமுத்து

* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் 
நிலவில் குளிரில்லை 
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் 
மலரில் ஒளியில்லை 
அவள் இல்லாமல் நான் இல்லை 
நான் இல்லாமல் அவள் இல்லை 
ல ல லல்ல ல ல லல்ல ல ல லா 

கோடி மின்னல் போலே ஒரு பார்வை 
மானோ மீனோ என்றிருந்தேன் 
குயிலோசை போலே ஒரு வார்த்தை 
குழலோ யாழோ என்றிருந்தேன் 
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தல் தீயோடு பஞ்சை சேர்த்தல் 
இன்று காதல் ஏக்கம் தண்டால் சென்றால் 
நாளை என் செய்வாளோ 

கலை அன்னம் போலவள் தோற்றம் 
இடையோ இடையில் கிடையாது 
சிலை வண்ணம் போலவள் தேகம் 
நிலவில் அதுவும் குறையாது 
என்னோடு தன்னை சேர்த்தால்...தன்னோடு என்னை சேர்த்தல் 
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றால் 
நாளை என் செய்வாளோ

* நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே 
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை 
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை 

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

* அவள் பறந்து போனாளே ....




அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே 
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே 

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே 
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே 

என் காதுக்கு மொழியில்லை 
என் நாவுக்கு சுவையில்லை 
என் நெஞ்சுக்கு நினைவில்லை 
என் நிழலுக்கு உறக்கமில்லை 
என் நிழலுக்கு உறக்கமில்லை 

இந்த வீட்டுக்கு விளக்கில்லை 
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை 
என் அன்புக்கு மகளiல்லை 
ஒரு ஆறுதல் மொழியில்லை 
ஒரு ஆறுதல் மொழியில்லை 

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே 
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே 

என் இதயத்தில் பூட்டிவைத்தேன் 
அதில் என்னையே காவல் வைத்தேன் 
அவள் கதவை உடைத்தாளே 
தன் சிறகை விரித்தாளே 

அவள் எனக்கா மகளானாள் 
நான் அவளுக்கு மகனானேன் 
என் உரிமைத் தாயல்லவா 
என் உயிரை எடுத்துச் சென்றாள் 
என் உயிரை எடுத்துச் சென்றாள்

* நானே நானா யாரோ தானா




நானே நானா யாரோ தானா ? 
மெல்ல மெல்ல மாறினேனா? 
தன்னைத்தானே மறந்தேனே 
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா) 

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே 
இதோ துடிக்க, 
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் 
எதோ படிக்க, 
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி 
இவள் தான் சரணம் சரணம் 

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் 
ஒரே நிலவு 
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் 
ஒரே மனது 
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் 
நரகம் சரணம் சரணம் 

* சண்டைகளும், சமாதானங்களும் ...



"உன் கூட டூ" 
என்று இரண்டு விரலை 
சுட்டி காட்டி, துவங்குகிறது 
பிள்ளை பிராயத்து சண்டைகள். 

கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே, 
"உன் கூட பழம்" என்று 
புன்னகைப்பூ பூக்க சமாதானப் பேச்சு... 

பிள்ளை பிராயத்தில் 
எல்லாமே 
சுலபமாக தான் உள்ளது. 
சண்டையானாலும் சரி, 
சமாதானங்களானாலும் சரி... 

வருஷக்கணக்காய் 
பார்த்தும், பார்க்காமல் 
போகும் முன்னாள் நண்பன்... 

சோறாக்கியாச்சு - 
சாப்பிட வரலாம்... 
விட்டத்தை பார்த்து சொல்லும் மனைவி. 

சிறிய கடனுதவி - 
செய்ய மறுத்ததால் 
முகத்தை தூக்கி 
வைத்து கொண்டிருக்கும் சகோ... 

எழுதும் எழுத்துகள் 
கோணலாக இருந்தாலும் - 
நேராக உள்ளது 
பிள்ளை பிராயத்து சிந்தனைகள். 

வளர வளர எல்லாமே 
வளர்கிறது... 
மனஸ்தாபங்களும், பேதங்களும்... 
அறிவு மட்டும் குறைவாக. 

யாரிடமும் 
சுலபமாக 

சொல்ல முடியாமலே போகிறது - 
"பழம்" என்று,

* கடவுள் மனிதனாக பிரக்க வேண்டும்



கடவுள் மனிதனாக பிரக்க வேண்டும் 
அவன் காதலிது வெதனயில் வாடவேண்டும் 
பிரிவென்ணும் கடனிலே மூழ்க வேண்டும் 
அவன் பெண் என்றால் என்ன வென்று உணர வேண்டும் 

எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான் 
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான் 
எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான் 
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான் 
அதை ஊரெங்கும் தூவி விட்டான், 
உளதிலே போதி விட்டான் 
ஊஞ்சலை ஆடவிட்டு உயரதிலே தங்கி விட்டான் 

அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு, 
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன் 
அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு, 
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன் 
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான், 
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான், 
பாவி அவன் பெண் குலதை படைக்காமல் நிருதிவைப்பான்

* நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ....

 


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? 
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? 
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? 
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? 
உயிரே விலகத் தெரியாதா? 

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா? 
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா? 
அன்பே மறையத் தெரியாதா? 

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? 
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? 
உயிரே விலகத் தெரியாதா? 

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா? 
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா? 
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா? 
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா? 

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? 
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? 
உயிரே விலகத் தெரியாதா?

* மௌனமே பார்வையாய் ...



மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும் 
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்  


 அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்  
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்  
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் -  என்னை  
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் 


 முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் 
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்  
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல  
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

* கண்ணே கலைமானே.....







கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே 
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் 
ஆரிராரோ ... 

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே 
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் 
ஆரிராரோ ... 

ஊமை என்றால் ஒரு வகை அமைதி 
ஏழை என்றால் ஆதிலொரு அமைதி 
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு 
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது 

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே 
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் 
ஆரிராரோ ... 


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் 
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் 
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே 
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி 

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே 
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் 
ஆரிராரோ ...

Friday, June 29, 2012

* என்ன பெத்த தாயே ...............

* வாழ நினைத்தால் வாழலாம்



வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே
வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

Thursday, June 28, 2012

* சம நோக்கு கவிதை




காக்கை குருவியைப்போல்
கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை
யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற
சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த
மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும்
கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது
கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே
என்பதற்கு என்ன பொருள்
உன்னால் முடிந்ததெல்லாம்
ஓரளவே என்று பொருள்.

* சம்சாரம் இனிது வாழ்க





சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!

* சக்தியொரு பாதியாய்

 

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!

* பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

* கவியரங்கக் கவிதை

 

முச்சங்கங் கூட்டி
…..முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
…..அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
…..சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
…..அமைத்த பெருமாட்டி !

வட்டிக் கணக்கே
…..வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
…..சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
…..சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
…..விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
…..உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
…..போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
…..ஏழை வணங்குகின்றேன்!

மலையளவு நெஞ்சுறுதி
…..வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
…..கனிந்துருகும் கவிக்கனிகள்
இவைதலையாய் ஏற்றமுற்று
…..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
…..அன்புமிகும் என்தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
…..கூட்டியதோர் கூட்டத்தில்
நாட்டத்தை நாட்டுவதில்
…..நற்கலைஞன் நீயிலையோ!
அந்தச் சிரிப்பலவோ
…..ஆளையெலாம் கூட்டிவரும்
அந்தச் சிறுமீசை
…..அப்படியே சிறைப்படுத்தும்
சந்திரனைப் போலத்
…..தகதகவென்றே ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
…..அரசியலே உருவாகும்!
எந்தத் துயரினிலும்
…..இதயம் கலங்காதோய்!
முந்துதமிழ் தோழ!
…..முனைமழுங்கா எழுத்தாள!
திருவாரூர்த் தேரினையே
…..சீராக்கி ஓடவிட்டுப்
பல்கும் மழைத்துளியைப்
…..பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதி தலைவ!
…..கவிதை வணக்கமிது!

போட்ட கணக்கிலொரு
…..புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக்
…..குறையாப் பொருள்வளர்க்கும்
நாட்டுக்கோட்டை மரபில்
…..நானும் பிறந்தவன்தான்
ஆனாலும் என்கணக்கோ
…..அத்தனையும் தவறாகும்!
கூட்டுகின்ற நேரத்தில்
…..கழிப்பேன்: குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக்
…..கூட்டுவேன்; கற்பனை
பெருக்குவேன்; அத்தனையும்
…..பிழையென்று துடைப்பத்தால்
பெருக்குவேன்; ஏதேதோ
…..பெரும்பெரிய திட்டங்கள்
வகுப்பேன்; வகுத்ததெலாம்
…..வடிகட்டிப் பார்த்தபின்பு
சிரிப்பேன்! அடடா! நான்
…..தெய்வத்தின் கைப்பொம்மை!

அன்றொருநாள் எந்தன்
…..அப்பனோடும் என்அன்னை
ஒன்றாமல் சற்றே
…..ஒதுங்கிக் கிடந்திருந்தால்
என்பாடும் இல்லை!
…..என்னால் பிறர்படைத்த
துன்பங்க ளில்லை!
…..சுகமாய் அவர்கண்ட
கூட்டலினால் என்னைஇங்கே
…..கூட்டிவந்து விட்டுவிட்டார்
கூட்டிவந்து விட்ட
…..குறைமதியை என்தோழர்
மேடையிலே கூட்டி
…..விளையாட விட்டுவிட்டார்
எத்தனையும் கூட்டி
…..ஐந்தொகை போட்டுப்பார்த்தால்
இத்தனைநாள் வாழ்வில்
…..எதுமிச்சம்? என்அன்னை
தந்த தமிழன்றிச்
…..சாரம் எதுவுமில்லை
‘போனால் போகட்டும்
…..போடா! இறந்துவிட்டால்
நானாரோ நீயாரோ!’
…..நல்ல பொழுதையெலாம்
அழுதே கழிக்காமல்
…..ஆடித்தான் பார்க்கின்றேன்!
கொத்தும் இதழழகும்
…..கொஞ்சும் இடையழகும்
சேலம் விழியழகும்
…..சேர்த்துப் பிறந்திருக்கும்
கோலக் கிளிமொழிகள்
…..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்!
கையில் மதுக்கிண்ணம்
…..கன்னி இளங்கன்னம்
காதலுக்கே தோன்றினான்
…..கவிஞன்எனும் வண்ணம்

இரவை பகலாக்கி
…..இன்பத்தைக் கூட்டுகின்றேன்!
அரசியலைப் பேசி
…..ஆத்மச் சிறகுகளை
உரசிக் கொதிக்கவைத்த
…..உற்பாதம் தீர்ந்துவிட்டேன்!
உடைந்துவிட்ட கண்ணாடி
…..ஒருமுகத்தைக் காட்டாது!
ஒடிந்துவிட்ட மரக்கிளையை
…..ஒட்டிவைத்தால் கூடாது!
காலம் சிறிதென்
…..கனவுகளோ பலகோடி!
காதல் ரசத்தினிலே
…..கனியக் கவிபாடிக்
கனவில் மிதக்கின்றேன்
…..கற்பனை நீராடி!
எண்ணிவந்த எண்ணம்
…..எல்லாம் முடிந்ததென்று

கிண்ணம் உடைந்தால்என்
…..கிறுக்கும் முடிந்துவிடும்!
பிறப்பில் கிடைக்காத
…..பெரும்பெரும் வாழ்த்தொலியும்
இறப்பில் கிடைக்காதோ?
…..என்கவிக்குத் திறமிலையோ?
அண்ணனுக்குப் பின்னால்
…..அழுதுவந்த கூட்டமெலாம்
கண்ணனுக்குப் பின்னாலும்
…..கதறுவர மாட்டாதொ!
‘வாழ்ந்தநாள் வாழ்ந்தான்;
…..வாழத் தெரியாமல்
மாண்டநாள் மாண்டான்!
…..மானிடத்தின் நெஞ்சத்தை
ஆண்டநாள் ஆண்டான்!
…..ஆண்டவனின் கட்டளையைத்
தோள்மீதில் ஏற்றுத்
…..தொடர்ந்தான் நெடும்பயணம்’

என்பாரும், ‘பாவி!
…..எவ்வளவோ பொருள் சேர்த்தான்
எல்லாமே தொலைத்தான்;
…..எம்மைக் கதறவிட்டுப்
போயினன்’ என்று
…..புலம்பியழும் பிள்ளைகளும்
கூட்டத்தில் சேர்ந்துவரும்!
…..குழப்பம் முடிந்ததென
நிம்மதியும் சில்லோர்
…..நெஞ்சி பிறந்திருக்கும்!
‘ஏடா அவலம்;
…..என்ன இது ஒப்பாரி?’
என்பீரோ! சொல்வேன்!
…..எல்லாம் மனக்கணக்கு!
கூட்டல் எனஎன்பால்
…..குறித்துக் கொடுத்தவுடன்
கூட்டித்தான் பார்த்தேன்
…..குடைந்து கணக்கெடுத்தேன்
முடிவைத்தான் பாட
…..முந்திற்றே யல்லாமல்
வாழ்வைநான் பாட
…..வார்த்தை கிடைக்கவில்லை

(இது கலைஞர் கருணாநிதி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கவியரங்கில் கவியரசு கண்ணதாசன் பாடிய கவிதை வரிகள்)

* பெண் வாழ்க

   
சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!

* குடும்பம்

 
பக்திமிக்க பூஜையறை காதலர்கள் பள்ளியறை
சக்தியோடு நாயகனார் தவம்புரியும் மேருமலை
அக்கரையும் இக்கரையும் அதன் நடுவே காவிரியும்
பக்குவமாய் ஓடுதல் போல் பயிலுகின்ற கல்வியறை
முற்றமது காமசுகம் முளைக்கின்ற பூமியல்ல;

மற்றுமொரு ஜீவனுக்கு வரவு சொல்ல வந்த இடம்
தம்பதிகள் உறவினிலே தாய்வயிற்றில் பிள்ளைவரம்
தாய்தகப்பன் குணம் போல சேய்க்குணம் தவழ்ந்துவரம்
ஆதலின் ஒன்றையொன்று
அநுசரித்துப் போவதுதான்
காதலிலும் இன்பம் வரும்
கண்மணிக்கும் நல்லகுணம்.

காதலில் மனைவியவள்
கருவடைந்த பின்னாலே
ஐந்துமா தம்வரைக்கும்
அழுவதென்ப தாகாது
அன்னை அழுதாலோ அலறியவள் துடித்தாலோ
அங்கம் பழுதுபட்டு அழகிழந்த பிள்ளைவரும்
கண்ணிரண்டும் கெட்டுவரும் கைகால் விளங்காது
வாய்மொழியும் தேறாது வாரிசுக்கும் உதவாது
எப்போதும் சிரித்தபடி இருக்கின்ற பெண்மயில்தான்
தப்பாமல் நல்ல தொரு தங்கமகன்(ள்) ஈன்றேடுப்பாள்
கணவன் அழகாக்க் கண்மணியை எதிர்பார்த்தால்
மனைவி மனம்நோகும் வார்த்தை சொல்லக் கூடாது.
அன்பு மொழிபேசி அரவணைத்து எந்நாளும்
தன்னையே மனைவியவள் சார்ந்திருக்கச் செய்து விட்டால்
பொன்னை வடித்த்துபோல் புத்திரர்கள் பிறப்பார்கள்!

கணந்தோறும் கணந்தோறும் கணவனையே நினைத்திருந்தால்
அவள் பெறும் ஓர் பிள்ளை என்றும் அப்பாவைப் போலிருக்கும்
ஆளான பின்னாலே ஆண்டாண்டு பொறுத்தவள்தான்
நாளாகி வயதாகி நல்லமனம் முடித்தவள் தான்.
ஆசை நிறைந்தாலும் அடக்கம் மிகுந்தவள்தான்
ஆனாலும் அந்த அழுகுமயில் வாழ்க்கையிலே
சூலான பின்னால்தான் சுகம்காணும் மயக்கம் வரும்.!
தேடும் மனையாளைத் திருப்தியுடன் வைத்திருந்தால்
கூடுகின்ற சந்ததியும் குணத்தோடு வந்துதிக்கம்.
மணவாழ்வு வாழுகையில் மறுவார்த்தை ஆகாது!
தாய்கொடுத்த சீர்வரிசை சகிக்கவில்லை! என்பதுவும்
ஜாடையாய்ப் பேசுவதும் தரம் குறைத்துக் காட்டுவதும்
அப்பன் கொடுத்த்தொரு ஆழாக்கு என்பதுவும்
வடுவாக நின்றுவிடும் வாழ்நாளில் ஆறாது
கொண்டவள்மேல் ஓர்பொழுது கோபம் வருமென்றால்
சண்டாளி சூர்ப்பனகை தாடகைநீ என்றெல்லாம்
அண்டாவில் அள்ளிவந்து அளந்துவைக்க்கூடாது
நாளைக்குப் பார்ப்போம், நடப்பதெல்லாம் நடக்கட்டும்
என்றே படுத்துவிட்டால் எழுந்திருக்கும் வேளையிலே
பெண்டாட்டி அன்புவரும் பெரிய நினைவு வரும்.
கடுகு அரிசியினைக் கற்தரையில் கொட்டிவிட்டால் மறுபடியும் திரும்பாது!
ஆழாக்கு அரிசியிட்டு அதில் வாழ்வு வாழ்ந்தாலும்
தாளாத காதலுடன் தாய்போல ஊட்டிவிட்டால்
தேவர் அமுதமெல்லாம் ‘சீ என்றே ஆகிவிடும்
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் மனசுதான் காரணமாம்
இன்பமென எண்ணிவிட்டால் எப்போதும் இன்பமயம்
துன்பமெனத் தோன்றினாலோ தொலையாத துன்பமயம்.

ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை
சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!
ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே
ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.
சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே
காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!
குற்றமெல்லாம் பார்த்துக் குறை பேசத் தொடங்கிவிட்டால்
சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்ல்லை!
பற்றவைத்தால் வைத்த இடம் பம்பரம் போல் ஆடிவிடும்
தள்ளிவைத்தால் தங்கதும் தவிடாக மாறிவிடும்!
கையில் அரைக் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை
என்றிருக்கும் வேளையிலே இருப்பதையே பெரிதாக்கி
கொத்தாக்க் கீரைதனைக் கொழம்புவைத்துப் போட்டாலும்
சத்தமின்றிச் சாப்பிடுங்கள் தருவான் இறைவன்.

சண்டையிட்டு ஆவதென்ன சஞ்சலம்தான் மிஞ்சிவிடும்
அண்டை அயல்சிரிக்கு அத்தனையும் கேலிசெய்யும்.
பகலில் அக்கம்பக்கம் பார்த்தபின்னால் பேசுங்கள்,
அந்திபட்டால் எப்போதும் அதுகூடக்கூடாது
வீட்டுக் கதைகளுக்கு விபரங்கள் வேண்டுமென்றால்
கட்டாக்க் கட்டிலில் குலவுங்கள் பேசுங்கள்
பால்கணக்கோ மோர்க்கணக்கோ பட்டெடுத்த
கடைக் கணக்கோ பேசும் கணக்கெல்லாம் பிறர் முன்னால் பேசாதீர்!

தப்புக் கணக்கென்று சந்தேகம் கிளப்பாதீர்!
பெண்டாட்டி தப்பென்று பிறர்முன்னால் சொல்லிவிட்டால்
கொண்டாட்டம் ஊருக்கு கொட்டுவார் கையிரண்டை!
பால்போன்ற வேட்டியிலே பட்டகறை அத்தனையும்
பார்ப்பவர் கண்களுக்கு படம் போல தோன்றிவிடும்!
நாட்டுமக்கள் வாழ்க்கையெல்லாம் நாலும் கலந்துதான்
வீட்டுக்கு வீடு ஒரு விரிவான கதையிருக்கம்
உன்கதையைக் கேட்ட்தானால் ஊரார் அழுவதில்லை
சிலரோ சிரிப்பார்கள்; திண்டாடு என்பார்கள்
நாட்டிலா வாழுகிறோம்; நாலும் திரிந்திருக்கம்
காட்டில் உலாவுகிறோம்; கவனம் மிகத்தேவை!
எடுத்தஅடி ஒவ்வொன்றும் எச்சரிக்கையாய் விழுந்தால்
அடுத்த அடி தப்பாது ஆண்டவனார் துணையிருப்பார்!
இந்துமதப் பெண்களது எத்தனையோ துன்பங்கள்
மெளனம் எனும் தீயினிலே மாயமாய்ப் போவதுண்டு
வாய்க்கட்டு வேண்டும் என்று வகையாய் உரைப்பார்கள்!
அதற்குப் பொருளிரண்டு, ஆகாத வார்த்தைகளை
ஊரெங்கும் வீசாமல் உள்ளேவை என்பதென்று
வாய்ச்சுவையை நாடி வயிற்றைக் கெடுக்காமல்
வாய்க்கட்டு போடு என்னும் வகையான புத்தியொன்று!
பெருக்கத்து வேண்டும் பணிவென்றும் எந்நாளும்
சுருக்கத்து வேண்டும் உயர் வென்றும் சொன்னார்கள்!
வற்றாத செல்வங்கள் வளமாகச் செருகையில்
அடக்கம் பணியிருந்தால் அனைவருமே மதிப்பார்கள்!
இவ்வளவு பணமிருந்தும் எவ்வளவு பணிவென்று
ஊரார் புகழ்வார்கள் உன்னடியில் பணிவார்கள்
கையில் பணமில்லை கடனாளி யாகிவிட்டான்
என்றெல்லாம் உரார் ஏளனமாய்ப் பேசுகையில்
கைநிறைய மோதிரங்கள் கடிகாரம் சங்கிலிகள்
பட்டாடை கட்டி பவனிவர வேண்டும்நீ
அப்போது ஊறார் அதை என்ன சொல்வார்கள்
எவனோ புளுகுகிறான்; இவனா கடனாளி?
பெண்டாட்டி பேரில் பெரியபணம் வைத்துள்ளான்
என்பார்கள் நீயே இன்னுமொரு தொழில் தெய்தால்
அவரே பணம் தந்து ஆதரிக்க வருவார்கள்
நான்குபுறம் கத்தி நடுவிலொரு முள்வேலி
முள்வேலி மீதே மோகனமாய் நாட்டியங்கள்
இதுதானே வாழ்க்கை! எதற்குக் கலங்குகிறாய்?
காலத்தைப் பார்த்துக் கணக்காய்த் தொழில் தெய்தால்
ஞாலமே உன்கையில் நவின்றாரே வள்ளுவனார்
நீரில் அழுக்கிருந்தால் நீர்ருந்த மாட்டோமா?
காய்ச்சிக் குடிக்கின்றோம்; கலவைக்கு வேலையென்ன?
இடுக்கண் வருங்கால் நகு என்றொல் எந்நாளும்
அடுத்து வருவ ததுபோல் இருப்பதில்லை

சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்
இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன்.
இன்ப துன்பங்களுக்க இதுதான் நியதி என்றாள்!
கோடை வெயிலடித்துக் கொளுத்து கின்ற வேளையிலே
அம்மா மழைஎன் றவறுகிறோம், மழைவந்து
வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால்
வெய்யிலையே தெடி விடிகதிரை வணங்குகிறோம்!
கூடும் குறையும் குறைந்த்தெல்லாம் வளமாகும்
எப்போது எது நடக்கும் இறைவனுக்குத் தான் தெரியும்.
நடைபோடும் யந்திரங்கள் இவ்வுலகில் ஏதுமில்லை
போடும் நடையைப் பொடி நடையாய்ப் போடுங்கள்
நடைபோடும் வேலைதான் நாம்செய்யக் கூடுவது
பார்த்த நடந்து பக்குவமாய்த் தொடருங்கள்
அப்போதும் முதுகினிலே அடிவிழுந்தால் எல்லாமே
தப்பாத ஈசன் சாட்டை யென எண்ணுங்கள்
கண்ணீரால் எந்நாளும் கவலை மறைவதில்லை.
விண்ணாளும் வேந்தன் வீடுசெல்லும் காலம்வரை
எண்ணுவன எண்ணுங்கள் இயக்குங்கள் துன்பமில்லை.  


                                                                                               எழுதியவர் :கண்ணதாசன்
                                                                    

* அனுபவமே கடவுள்

 

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

* கோப்பையில் என் குடியிருப்பு



ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!

                                                                                
எழுதியவர் :கண்ணதாசன்

* பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது



பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..  


                                                                        எழுதியவர் :கண்ணதாசன்



* என்னவளே!!!........



என்னவளே!!!........
என்னவளே!!!

மரணம் கூட சுகம்தான்...

உயிர் பிரிவது

உன் மடியாக இருந்தால்

* முத்தம் .....



முத்தம் .....

ஒரே...
முத்தத்தில்
என் "உயிர்"
மொத்தத்தையும்...
குடித்து விட்டாயடா.!

* தவிக்கிறேன்



தவிக்கிறேன்
என்னை
தவிக்க விட்டு
எங்கே சென்றாய்,

காற்றாய்
உன்னை தேடி வருகிறேன்,

ஒரு முறை
நீ என்னை சுவாசிப்பாயா???

* உன் பாதையில்



உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...

* '' '' நட்பு......



நட்பு என்பது
சூரியம் போல்
எல்லா நாளும்
...பூரணமாய் இருக்கு

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மனசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் உற்றினாலும்
ஒரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும் .......

* காதல்....



சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை............

* oh heart ! oh heart !



oh heart ! oh heart !
Why do you cry from insaid?
oh heart ! oh heart !
Why have you broken into pieces?
We asked for the rain
Who has given these tear drops?
We asked for flower's
Who has thrown these pebbles?
Want to pull the cloud,
Spread it as blanket.....
And sleep in the sky
Our desires were broken
Tron off into pieces....
And were thrown
Over thorns by love
You gave me love in my dream's
And kissed me everywhere
When i woke up from dream's
My hands were bleeding
Would there be a flate sans holes?
Can it be compete sans failures?

There is none who is bom
brought up with happiness...
And died happily
there is none who is bom
brought up with sorrow...
half of happinesss
and half of sorrow
Both are part of life
if bumt in fire and bathed in water...
then gold would turn an orament
it is the ladder to saccess....
! oh heart !

Why do you cry from insaid?
oh heart ! oh heart !
Why have you broken into pieces?
We asked for the rain
Who has given these tear drops?
We asked for flower's
Who has thrown these pebbles?
Want to pull the cloud,
Spread it as blanket.....
And sleep in the sky
Our desires were broken
Tron off into pieces....
And were thrown
Over thorns by love
You gave me love in my dream's
And kissed me everywhere
When i woke up from dream's
My hands were bleeding
Would there be a flate sans holes?
Can it be compete sans failures?

There is none who is bom
brought up with happiness...
And died happily
there is none who is bom
brought up with sorrow...
half of happinesss
and half of sorrow
Both are part of life
if bumt in fire and bathed in water...
then gold would turn an orament
it is the ladder to saccess....

Tuesday, June 26, 2012

* காதல் ஏக்கம்

 

உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!

* ஒருதலைக் காதல்



காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

* கண்டதும் காதல்



முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

* கனவில் என் வாழ்க்கை



பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

* காதல்



உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

ஏன் நீ என்னைக் காதலிக்கவில்லை?..




ஏன் நீ என்னைக் காதலிக்கவில்லை?..

ஏன் நான்
உன்னைக் காதலிக்கிறேன்
அதற்கு என்னால்
ஆயிரம் கரணம் சொல்ல முடியும்

ஏன் நீ
என்னைக் காதலிக்கவில்லை
அதற்கு நீ
ஒரேயொரு காரணமாவது சொல்...

* காதல் .........



காதல்
 உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!

வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவிழும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி!

இல்லத்தில் நீயிருந்தால்
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ்உனது
சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

* அடிக்கடி 'கூடுங்க', நீண்ட நாள் வாழுங்க!


எதைச் செய்தால் இளமையாக இருக்கலாம்... இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விதான். ஆனால் எதையும் செய்யாமல் சிம்பிளாக ஒன்றே ஒன்றை மட்டும் ரெகுலராக செய்து வந்தாலே போதும் நோய் நொடி அண்டாமல், மகிழ்ச்சியாக, நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் - அது செக்ஸ்.செக்ஸ் உறவு நமது மனதுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல நன்மைகளை கொண்டு வருகிறதாம். செக்ஸால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா...
இதயத் துடிப்பு சீராக இருக்கும்

ரெகுலராக செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு இதயத் துடிப்பு சீராக இருக்குமாம். மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையுமாம். மேலும் வயதானவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு மாரடைப்பு வரலாம் என்ற வாதம் தவறானது. மாறாக வயதானவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு இதயத் துடிப்பு நல்ல சீரான நிலையில் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.30, 40, 50 வயதுகளிலும் அதற்குப் பிறகும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் எந்த ஆணுமே மாரடைப்பு அபாயத்தில் இருப்பதாக இதுரை நிரூபிக்கப்படவில்லை என்பது டாக்டர்களின் வாதம்.
ஆண்குறி எழுச்சிப் பிரச்சினை வராது
சீரான, முறையான, தொடர்ச்சியான செக்ஸ் உறவை கடைப்பிடிப்போருக்கு ஆண் குறி எழுச்சியின்மை பிரச்சினை வரவே வராது என்பது இன்னொரு விஷயம். வாரத்திற்கு குறைந்தது 2 முறை செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லதாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண் குறி எழுச்சியின்மை பிரச்சினை குறைகிறதாம்.
மன அழுத்தம் குறையும்தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொள்வோருக்கு மன அழுத்தம் வெகுவாக குறைகிறதாம். மேலும் மன நிம்மதி அதிகரிக்கிறதாம். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தாக செக்ஸ் இருக்கிறதாம்.வெயிட் குறையும்செக்ஸ் உறவு என்பதே ஒரு நல்ல உடற்பயிற்சிதான். எனவே தொடர்ச்சியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோருக்கு உடல் எடை அதிகரிப்புப் பிரச்சினை வருவதில்லையாம். மாறாக ஏகப்பட்ட கலோரிகள் குறைவதால் உடல் எடையும் குறைந்து ஸ்லிம்மாக காட்சி தருவார்களாம்.ஒரு முறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற் பயிற்சி செய்ததற்குச் சமமாம்.மகிழ்ச்சி அதிகரிக்கும்செக்ஸ் உறவின்போது மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும் என்டோப்ரீன் ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியாகிறதாம். இதனால் மகிழ்சி அதிகரிக்கிறதாம்.'ஃபிட்'டாக இருப்பீர்கள்உடல் ரீதியான இன்பம் பூர்த்தியாகும்போது உடல் பொலிவும் கூடுகிறதாம். செக்ஸ் உறவில் தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு மனம், உடல் ஆகிய இரண்டுமே 'ஃபிட்'டாக இருக்குமாம். இதற்குக் காரணம், உடலில் உள்ள தசைகள், செக்ஸ் உறவின்போது நன்கு செயல்படுகிறது. இதன் காரணமாக தேவையில்லாத கொழுப்பு குறைந்து, தோற்றப் பொலிவு கூடுகிறதாம்.சளி பிடிக்காதுங்க...வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் உறவு கொள்வோருக்கு இம்யூனோ குளோபுலின் ஏ அதிகம் சுரக்கிறதாம். இது சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கக் கூடிய சக்தி படைத்தது. எனவே தொடர்ச்சியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோரை அவ்வளவு எளிதில் காய்ச்சல், சளி அண்டாதாம்.என்றும் இளமைதொடர்ச்சியான செக்ஸ் உறவு என்பது நமக்கு வயதாகி வருவதை மறக்கச் செய்யும்.எப்போதும் உற்சாகத்துடன் இருப்பதால் என்றும் இளமையாக நம்மைக் காட்ட உதவும். விட்டமின் டி, செக்ஸ் உறவின் காரணமாக நமது தோலில் அதிகரிக்கிறதாம். இதனால் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து நம்மை மார்க்கண்டேயனாக காட்ட உதவும்.வாழ்நாள் நீடிக்கும்செக்ஸ் உறவுக்கு வாழ்நாளை நீட்டிக்கும் சக்தியும் கூட உண்டு. மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் உறவு வைத்திருப்பவர்களை விட வாரத்திற்கு 2 முறை செக்ஸ் உறவு கொள்வோருக்கு வாழும் நாள் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.மொத்தத்தில் செக்ஸ் என்பது பாலியல் சந்தோஷம் மட்டும் அல்ல, நமது வாழ்நாள் சந்தோஷத்தையும் கூட உள்ளடக்கியதாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.பிறகென்ன, அடிக்கடி 'கூடுங்க', நீண்ட நாள் வாழுங்க!

* காதலே



சாகும் வ‌ரை
உன் அருகில்
வாழும் வ‌ர‌ம் நான் கேட்டேன்...
ஆனால் நீயோ
வாழும் வ‌ரை
உன் நினைவில்
சாகும் வ‌ர‌ம் த‌ந்த‌து ஏனெடி.......