உலகிலேயே வயது கூடிய நாய்!
உலகிலேயே வயது கூடியது தனது செல்லப் பிராணியென்றும் அதற்கு தற்போது 22 வயதெனவும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த இதன் எஜமானருடன் 'பிலி' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த நாய் வாழ்ந்து வருகிறது.
சராசரியாக நாயொன்றின் ஆயுட்காலம் சுமார் 15 வருடங்கள் மட்டுமே. ஆனால் இதன் வயதோ 22 ஐத் தொட்டுள்ளது. மனித வயதுடன் ஒப்பிடும் போது இது சுமார் 154 வருடங்களுக்குச் சமமாகும்.
இதன் ஒரு கண் தற்போது குருடாகியுள்ளது. மேலும் சில பற்களே அதற்கு எஞ்சியுள்ளன. அது இதனைவிட வயது குறைந்த நாய்களை விட ஆரோக்கியமாக இருப்பதாகவும் . தினமும் 2 வேளை தன்னுடன் நடைப்பயிற்சிக்கு வருவதாகவும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இது தற்போது அதன் 2ஆவது உரிமையாளருடனேயே இருக்கின்றது. அதன் முதல் உரிமையாளர் இறந்த பிறகு, தற்போதைய உரிமையாளர் காப்பகம் ஒன்றிலிருந்து இதனைப் பெற்றுள்ளார்.
அதன் முதல் உரிமையாளர் இந்நாயை 1988 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.

No comments:
Post a Comment