Wednesday, December 12, 2012

* காட்டுவிலங்குகளைப் போல் உடலில் வர்ணம் பூசிக்கொண்ட கலைஞர்கள்

காட்டு விலங்குகளைப் போன்று  உடலில் வர்ணம் பூசிக்கொண்டு மொடல் அழகிகள் பலர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி, பலரை வியக்க வைத்திருக்கின்றன.

நான்கு நாட்கள் தினமும் ஏழு மணித்தியாலங்களாக மேக்அப் செய்து இவர்களது இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் 12 அடி நீளமான மலைப்பாம்மை உடலில் சுற்றியது போலவும் சிறுத்தையொன்று அமர்ந்திருப்பது போன்றும் யானையின் மீது சவாரி செய்வது போன்றும் காட்சிக் கொடுத்துள்ளனர்.

வன விலங்குகளை படமெடுப்பதில் புகழ்பெற்ற புகைப்படப் கலைஞர் லென்னெட்டி நிவெல் இப்படங்களை பிடித்துள்ளார்.  'அனி ஹியூமன்' என்ற புகைப்பட தொடரின் ஒருபகுதியாக இருந்தும் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நிவெல் இது குறித்து கூறுகையில், 'மனிதர்களும் மிருகங்களும் சகோதரர்கள் என நான் காட்ட விரும்பினேன்' என்று தெரிவித்துள்ளார். 








No comments:

Post a Comment