கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வருகின்றார். சினையாக இருந்த இந்த ஆடு, நேற்று இரவு 11 மணி அளவில் குட்டி ஒன்றை ஈன்றது.

அந்தக் குட்டி வழக்கமாக இருக்கும் ஆட்டுக்குட்டியை போல் அல்லாமல் மனிதரின் முகத்தை ஒத்துக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி சிறிது நேரத்தில் இறந்தது.

இது குறித்து முத்துசாமி கூறியதாவது, எங்கள் ஆடு, முதல் முறையாக குட்டி ஈன்றது. ஆனால் அது முற்றிலும் வினோதமான முறையில் காணப்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் ஒரு ஆடு, தலையில்லாத ஆட்டுக்குட்டியை ஈன்றது.

தற்போது மனித முகத் தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி ஈன்றது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆட்டுக் குட்டியை உடனடியாக புதைத்து விட்டோம் என்று கூறினார்.