Tuesday, December 18, 2012
உலகின் மிக குள்ளமான பெண்ணான இந்திய யுவதி
உலகில் மிகக் குள்ளமான பெண்ணாக இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜியோதி அம்கே எனும் யுவதி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.இவரது உயரம் 2 அடி 0.06 அங்குலம் மட்டுமாகும். இது சராசரியாக இரண்டு வயது குழந்தையின் உயரமாகும்.இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஜெட் ஜோர்டன் எனும் வயது 22 பெண் உலகின் மிகக் குள்ளமானவராக விளங்கினார். பிரிஜெட் ஜோர்டன் 2 அடி 3 அங்குலமுடையவர்.ஜியோதி அம்கே, தனது 18 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில், உலகின் மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டமைக்கான தனது சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.'புதிய உலக சாதனையுடன பிறந்த நாள் கொண்டாடுவது அற்புதமானதாகும். இது உண்மையில் எனது பிறந்த நாள் பரிசு. நான் இந்த உயரத்தைக் கொண்டிருப்பதை பெரிய விடயமாக கருதுகின்றேன். நான் இவ்வாறு குள்ளமாக இல்லாவிடின் நிச்சயமாக இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது' என ஜியோதி அம்கே தெரிவித்துள்ளார்.உலக வரலாற்றில் மிக குள்ளமான பெண்ணாக பௌலின் மஸ்டர்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1895 ஆம் ஆண்டு மரணமடைந்த பௌலின் மஸ்டர்ஸின் உயரம் 2 அடி மாத்திரமேயாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment