Sunday, December 16, 2012

புகைப்படங்களிலிருக்கும் எழுத்துருவின் (Fonts) பெயரை அறிவது எப்படி


விளம்பரங்கள் மற்றும் ஏனைய கிராபிக் டிஸைன்களில் கவர்ச்சிகரமான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதே எழுத்துருக்களை பயன்படுத்தி ஏனைய கிராபிக் வேலைகளை நீங்களும் செய்ய விரும்பினால் அந்த எழுத்துருக்களின் பெயரை அறிவது அவசியமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவுவதே WhatFontis என்ற வெப் அப்பிளிகேஷனாகும்.

நீங்கள் செய்ய வேண்டியது பான்ட் பெயர் அறியவேண்டிய டிஸைனை ஒரு புகைப்படமாக கணினியில் சேமித்து அதை whatfontis இல் தரவேற்றம் செய்யுங்கள்.

ஏனைய அறிவுறுத்தல்களை பின்பற்றிச் சென்றால் இறுதியில் எழுத்துருவின் பெயரை நீங்கள் அறிந்துவிடலாம்.

இணைப்பு : http://www.whatfontis.com/

No comments:

Post a Comment