Thursday, December 20, 2012

உங்கள் மூளையின் வயதை கண்டறிவதற்கு

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயது தானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த முகவரிக்கு சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி(விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும்.
முதலில் எளிதாக இருந்தாலும், போகப் போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
அடுத்த பிரிவு அடென்ஷன்(Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு மொழி(Anagrams): எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.
இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.

No comments:

Post a Comment