இங்கிலாந்து நாட்டிலுள்ள கிரேட் யார்க்ஷேரியில் விவசாய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த அதிசய காய்கறிகளை கொண்டு வந்து காட்சிக்கு வைத்தார்கள். இதில் அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியிலுள்ள நிவார்க் என்ற ஊரை சேர்ந்த கிளேஸ்பெர்க்(வயது 68) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த 8.2 கிலோ (18 பவுண்ட்) எடை கொண்ட ராட்சத வெங்காயத்தை காட்சிக்கு வைத்தார். இது புதிய உலக சாதனையாகும். இதை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முன்பும் இவர் 18.5 அடி நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து சாதனை படைத்தவர் ஆவார். தற்போது ராட்சத வெங்காயத்தை உற்பத்தி செய்து 2-வது சாதனை புரிந்துள்ளார்.


No comments:
Post a Comment