Wednesday, December 12, 2012

பாம்பைப் பிடித்து கழுத்தில் தொங்கவிடும் மட்டக்களப்பு இளைஞன்!

 பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.  ஆனால் பாம்புகளை மிக சாதாரணமாகவே கைகளால் பிடிக்கின்றார் ஒரு இளைஞன், கைகளில் வைத்திருக்கின்றார், கழுத்தில் மாலையாக அணிகின்றார்.  பாம்புகள் இவரை கோபிப்பதும் இல்லை, தீண்டுவதும் இல்லை, இவரது கழுத்தை நெருக்குவதும் இல்லை.  இவ்வதிசயம் நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான்.  மட்டக்களப்பில் உள்ளது விளாவெட்டுவான் கிராமம். இங்கு வசிக்கின்ற சாதாரண இளைஞர்களில் ஒருவர்தான் அல்லிமுத்து ஜெயக்குமார்.  ஊரில் உள்ள நாக தம்பிரான் ஆலயத்தில் அவ்வபோது தொண்டுப் பணிகள் செய்து வருகின்றார்.  இதனால் இவருக்கு நாக தெய்வங்களின் அருள் உள்ளது என்றும் ஆகவேதான் பாம்புகள் இவரை ஒன்றும் செய்வதில்லை என்றும் ஊரே விசுவாசிக்கின்றது.








No comments:

Post a Comment