Wednesday, December 12, 2012

நரி அல்லது ஓனாய் போன்ற ரோமம் உள்ள சகோதரிகள் !

நீங்கள் படத்தில் காணும் 3 பேரும் பெண்களே ! சவித்தா(23 வயது) மொனிஷா(18 வயது) சாவித்திரி(16 வயது) என்ற மூன்று சகோதரிகளும் ஓனாய் போன்ற உருவ அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த ரோமங்கள் காணப்படுகிறது. வழமைக்கு மாறாக இவர்கள் உடலில் ஓனாய் அல்லது நரிக்கு வளரும் ரோமங்கள் காணப்படுவது ஒன்றும் அதிசயம் அல்ல என்கின்றனர் சில மருத்துவர்கள். 1 பில்லியன் மக்களில் ஒரு சிலருக்கே இவ்வகையான நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருவகையான குறைபாடு என்றும் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.   லேசர் கதிர்களைப் பாவித்து இவர்கள் முகத்தில் தேவையில்லாத இடத்தில் காணப்படும் முடியை அகற்ற முடியும் என வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி அகற்றப்பட்ட இடங்கள் போக மீதி இடங்களில் தொடர்ந்தும் ரோமம் வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவாம். இவ்வாறு தமக்கு ரோமம் வளர்ந்திருப்பதால் தம்மை எவரும் மணம் முடிக்க வரவில்லை, அது சாத்தியப்படாது என்று இச் சகோதரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளதால், கருணை உள்ளம் கொண்ட பலர் இச் சகோதரிகளுக்கு உதவ முன்வந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.  லேசர் சிகிச்சை மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற ஒருவருக்கு தலா 4,500 பவுண்டுகள் செலவாகும் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. உலகில் தற்போது தேவையற்ற முடிகளையும் ரோமங்களையும் நிலந்தரமாக அகற்ற பலதரப்பட்ட கிரீம் மற்றும் பூச்சு மருந்து வகைகள் இருக்கின்றது. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை இச் சகோதரிகளுக்கு வேலைசெய்யவில்லை. அதாவது முடியை அகற்றும் கிரிம் இவர்களிடம் தோற்றுப்போய் விட்டது என்று தான் சொல்லவேண்டும் !






No comments:

Post a Comment