Tuesday, May 7, 2013

* பிறர் குடும்ப ரகசியம் நமக்கெதற்கு???:நாயகம்(ஸல்)



தங்கள் குடும்ப ரகசியம் வெளியே கசியக்கூடாது என நினைப்பவர்கள், வீட்டுக்குள் வைத்து மெதுவாகப் பேசுவார்கள். அதை எப்படியோ தெரிந்து கொள்ளும் சிலர், அதை ஒட்டுக்கேட்பார்கள். அவர்களின் காதில், அந்தக் குடும்பத்தினர் பேசுவது ஏதோ அரைகுறையாக விழும். இதுபற்றி பிறரிடம் சொல்லும் போது, அவர்கள் பேசாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல வேண்டி வரும். இப்படி வெளியில் கசியும் அந்த ரகசியம், சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்து விட வாய்ப்புண்டு.
நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, “”நீங்கள் தவறான சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப் படுகிற விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள்.
பிறரைப் பற்றி துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். இறைவனின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்,” என்கிறார்கள்.


No comments:

Post a Comment