Tuesday, May 7, 2013

* சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு!



பொதுவாக எதற்கெடுத்தாலும் எந்த விசயத்திலும் சந்தேகிக்கும் குணம் ஆண்களை விட
பெண்களுக்கு சற்று அதிகமாவே இருக்கும், சில பெண்கள் எதற்கெடுத்தாலும் எல்லா விசயத்தையும் சந்தேகப் பார்வையோடு தான் பார்ப்பார்கள் இதனால் தனிப்பட்ட முறையில் அவர்களுகென்று பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படுவதில்லை ஆனால் அந்த குணமானது தாம்பத்திய வாழ்க்கையில் நுழைந்தால் பிறகு அவங்க வாழ்க்கையே வீணாகிவிடும், இதை பலரும் தங்கள் அனுபவத்தில் அறிந்து வைத்திருப்பர்,ஆனால் அவ்வாறு கண்கெட்டப் பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோசனம், மாறாக கணவன் மனைவியையோ அல்லது ஒரு மனைவி கணவனையோ சந்தேகப்பட்டுக் கொண்டு, அவ்வாறு தவறே செய்யாத பட்சத்தில் வீணாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையை வீணடித்து துன்பகரமாக்கிக் கொள்வதில் யாருக்கும் லாபமில்லை.

அவ்வாறு ஒருவர் மீது சந்தேகப்படும்படியான செயல்கள் தென்பட்டால் அதை நேரிடையாக கேட்டு சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும், அதை விடுத்து ஒருவரை ஒருவர் வேவு பார்த்துக் கொண்டு அவன்/அவள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் குற்றம் கண்டு பிடித்து மறைமுகமாக சண்டைப் போடுவது போன்றவைகள் குடும்ப அமைதியை குலைத்து விடும், அதுப் போன்ற குடும்பங்களில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையும் நரகமாகிவிடும் .

ஆகவே எந்த விதமான சிறிய சந்தேகம் எழுந்தாலும் அதை உடனுக்குடன் கேட்டு அதற்கு முற் று புள்ளி வைத்து பிரச்சனையை சரி செய்துக் கொள்வது தான் நல்லது. இல்லாவிடில் அதை வளர்த்து விட்டு பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.அவ்வாறு ஒருவரை ஒருவர் சந்தேகித்து கேட்கும் கேள்விகளுக்கு கெளரவம் பார்க்காமல் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் இருக்கின்றது என்பதை மறக்கக் கூடாது,

பொதுவாகவே சில ஆண்களுக்கு கேட்க்கும் கேள்விக்கு பதிலளிக்க பிடிக்காது என்பதால் மனைவியின் கேள்விகளை அலட்சியப் படுத்துவார்கள், அதைப் போலவே வேறு சில ஆண்கள் தன்னை சந்தேகப படுகின்றாளே என்ற கோபத்தில் சரியான பதிலளிக்க மறுத்து விடுவார்கள், ஆனால் அவ்வாரான அலட்ச்சிய போக்கு தவறாகி அவர்களின் மிது திணிக்கப் பட்ட சந்தேகம் மேலும் வலுக்கத்தான் வழி வகுக்கும் என்பதை கணவர்கள் மறந்துவிடக் கூடாது, கேட்க்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது கணவனின் கடமை இல்லாவிடில் அவ்வாறு கேள்வி எழா வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும்.

அதைப் போலத்தான் பெண்களும் கணவனின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்க வேண்டுமே ஒழிய என்னைப் பார்த்து ஏன் இந்த கேள்வியை கேட்டாய்? என்னை சந்தேகப் படுகின்றாயா? என்று காச் மூச் என்று கத்தக் கூடாது. தன் மனைவியின் போக்கில்,நடத்தையில் சந்தேகிக்கும்படியான மாற்றம் காணப்பட்டால் கணவன் அதை நேரடியாக கேட்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆகவே பேசித் தீர்க்காத விசயம் என்று ஒன்றுமில்லை,அமைதியான முறையில் அணுகும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.நன்றி.

No comments:

Post a Comment