Wednesday, May 8, 2013

* நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!


நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!


நினைப்பு பொழைப்பே கெடுத்துச்சாம்!
எங்கே ஒழியப்போகிறது....!
முடிவுப் பெறுவதற்கு என்ன மூன்று மணிநேர சினிமாவா? வாழ்க்கை....!
இது தொடர் கதைதான்...! மெகா சீரியல் மாதிரி...! தொன்று தொட்டே போகும்....!
இவரைப்போன்று பல இளம் இதயங்களின் வாழ்க்கை...!



ஒழியும்!
வாய்மை, நீதியும்
உண்மையும், நேர்மையும்
பண்பாடும், கலாச்சாரமும்
பாரம்பரியம், நல்லகுடும்பம்,
கண்ணியமிக்க ஆடைகள்,
உன்னத உறவு, நட்பு
இயற்கை உணவு,
இழப்பில்லாத ஆரோக்கியமும்
போன்றவைகள் அழிந்து
கொண்டுவருகின்றன!

வளரும்!
பிராடும், பித்தலாட்டமும்
அசிங்க அலங்காரமும்,
அரைகுறை ஆடை முறையும்
ஊழலும், லஞ்சமும்
காமக்காதலும், கள்ள உறவும்
விளம்பர நம்பிக்கையும்,
ஆடம்பர வாழ்க்கையும்
பாஸ்ட்டு புட்டும்,
புதிய நோய்களும்
அறிவு வளர்ச்சியும்,
பகட்டு வாழ்க்கையும்
இன்னும் பல நம்மிடம்
வளர்ந்து வருகின்றன!

பஞ்சம் தலை
விரித்தாடியதால்
பள்ளியில் படிக்கிற
வயதில் வீதிகளில்
தலைவிரி கோலத்தோடு
கழிவு பாலிதீன் பை
பொருக்குகிறான்
குடும்பத்தில் உள்ளவர்கள்
பாதி வயிறு பசியைப்போக்க!

பஞ்சம் எப்போது தீரும்...!
நல்லோர்கள் இல்லையேல்
இனியஉலகம் வறுமையில் வாடும்.
மாற்றும் திறன் மனிதனுக்கு இல்லை
ஏழ்மையை ஒலிக்கும் வல்லமை
நம்மை படைத்தவனுக்கே...!

நீ தன்னம்பிக்கையோடு போராடு
நாளை நீ மிகப்பெரிய
சரித்திரம் படைக்கலாம்!

No comments:

Post a Comment