Wednesday, May 1, 2013

* இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில்




நாட்டுக்குள் இன ரீதியான மத ரீதியான முறுகல் நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவற்றின் உண்மை நிலையை அரசு இன்று (07) விளக்கமளிக்கும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறுவதாக முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே மத ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக உண்மை நிலையை விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது. இன்று சபையில் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளை 23/2 இன் பிரகாரம் பேசும்போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பெளத்த குழுக்கள் செயற்படுவதாகவும் குளியாபிட்டியில் சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணரத்தனாவும் நாட்டின் இன, மத ரீதியான முறுகல் நிலை இல்லை என்றார். எனினும் அன்றே குளியாப்பிட்டியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதில் பேசிய சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா, இன்று சபையில் தெளிவான விளக்கமளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment