Tuesday, May 7, 2013

* *டாக்டர் ஆபியா சித்தீகி...!!


*டாக்டர் ஆபியா சித்தீகி...!! 

ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் அமெரிக்கா சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார். கொடுமையின் உச்சகட்டமாக பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டு ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததார்கள்.ஆறு பேர் வதை முகாமுக்கு வருவார்கள் அவர்கள் பலவந்தமா ஆபியாவை நிர்வாண படுத்தி பாலியல் வதை செய்வார்கள் அந்த நிலையில் இரத்தம் ஓடும்வரை துப்பாகிகளின் பின் புடியினால் மிக மோசமாக அறைவார்கள்.நிர்வாண படுத்தப்பட்ட ஆபியாவை கட்டில் ஒன்றில் கால்களையும் , கைகளையும் கட்டி கால்களிலும் , தலையிலும் வர்ணிக்க முடியாத சித்திர வதைகளை செய்வார்கள் அவரின் உடலில் அறியபடாத திரவங்களை ஊசியின் ஊடாக செலுத்துவார்கள் உடைகளை பலவந்தமாகநீக்கி வதை முகாமில் அவரின் தலை முடியில் பிடித்து இழுத்து வதைபார்கள்எல்லா வற்றுக்கும் மேலாக அவரை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்

*பாத்திமா பவுச்சர்...!!

2004ம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அறையில் அ மெரிக்க உளவுத் துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சரை சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து நாட்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்

*ஈரானில் பிடிக்கப்பட்ட வேசம் அல்துல்ரஹ்மான் அகமது அல்-தீமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு தூங்க விடாமல் செய்வது, கூரையில் கட்டித் தொங்க விடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைகேட்க வைப்பது என்று 40 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்.

*அமெரிக்க மீதான விமான தாக்குதல்களை திட்டமிட்டவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு குவான்டனாமோ பே சிறையில் விசாரிக்கப்பட்டு வரும் காலித் ஷேக் மொகமது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர். சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க உளவுத் துறையிடம் ஆப்கானிஸ்தானில் ரகசியமாக ஒப்படைக்கப்பட்டு, போலந்துக்கு கடத்தப்பட்டார். அங்கு அவர் 183 முறை தண்ணீர் சித்திரவதை செய்யப்பட்டார்.

இதோ நீ நடத்திய மிருக வெறியாட்டத்துக்கு
என்ன பெயர் ? என்ன பதில்? ஒ நீ நடத்தியது முஸ்லிம்கள் மீதோ ?
உனக்கும் இஸ்ரேலுக்கும் நேரப்போக்கும்,மனித உரிமையும் அதானே !உனக்கு எதிராய் தீர்மானம் கொண்டு வர எந்த ஒரு மானம் உள்ள நாட்டையும் காணோமே...!!

No comments:

Post a Comment