Wednesday, December 12, 2012

*வியப்பில் ஆழ்த்தும் வினோத தவளை

தனது வாழ்க்கையில் சில காலத்தை ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் கழித்து தற்போது மேட்ரிட்டில் வசித்து வரும் 37 வயதான நிக் றியூசென்ஸ் என்பவர் அரியவகை தவளை ஒன்றினை தனது கமெராவிற்குள் சிறைப்பிடித்துள்ளார்.  கோஸ்டா றிக்கா எனும் பகுதியில் காணப்படும் இத்தவளைகள் கண்ணாடி போன்ற தமது உடலினூடு ஒளியை ஊடுகடத்தக் கூடியவையாகக் காணப்படுகின்ன. இவ் அரியவகை தவளைகள் புகைப்படம் பிடிப்பதற்காக 20 நாட்களை காட்டுக்குள் செலவழித்துள்ளார் நிக்.






ஒரே ஒரு வெங்காயம் 8 கிலோ எடை இருக்குமா?

இங்கிலாந்து நாட்டிலுள்ள கிரேட் யார்க்ஷேரியில் விவசாய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த அதிசய காய்கறிகளை கொண்டு வந்து காட்சிக்கு வைத்தார்கள்.  இதில் அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியிலுள்ள நிவார்க் என்ற ஊரை சேர்ந்த கிளேஸ்பெர்க்(வயது 68) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த 8.2 கிலோ (18 பவுண்ட்) எடை கொண்ட ராட்சத வெங்காயத்தை காட்சிக்கு வைத்தார். இது புதிய உலக சாதனையாகும்.  இதை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முன்பும் இவர் 18.5 அடி நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து சாதனை படைத்தவர் ஆவார். தற்போது ராட்சத வெங்காயத்தை உற்பத்தி செய்து 2-வது சாதனை புரிந்துள்ளார்.



* சீனாவில் தோன்றிய கடல் கன்னி

சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது. ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.




இது வாயா இல்லை வங்காள விரிகுடாவா?

உலகிலேயே மிகவும் பெரிய வாயைக் கொண்டவர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார் அங்கோலா நாட்டைச்சேர்ந்த பிரான்ஸிஸ்கோ டொமிங்கோ என்பவர்.  இவரது வாயானது 6.69 அங்குலத்திற்கு அகலமானதுடன் ஒரு கொகா கோலா ரின்னை வாயினுள் திணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




நரி அல்லது ஓனாய் போன்ற ரோமம் உள்ள சகோதரிகள் !

நீங்கள் படத்தில் காணும் 3 பேரும் பெண்களே ! சவித்தா(23 வயது) மொனிஷா(18 வயது) சாவித்திரி(16 வயது) என்ற மூன்று சகோதரிகளும் ஓனாய் போன்ற உருவ அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த ரோமங்கள் காணப்படுகிறது. வழமைக்கு மாறாக இவர்கள் உடலில் ஓனாய் அல்லது நரிக்கு வளரும் ரோமங்கள் காணப்படுவது ஒன்றும் அதிசயம் அல்ல என்கின்றனர் சில மருத்துவர்கள். 1 பில்லியன் மக்களில் ஒரு சிலருக்கே இவ்வகையான நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருவகையான குறைபாடு என்றும் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.   லேசர் கதிர்களைப் பாவித்து இவர்கள் முகத்தில் தேவையில்லாத இடத்தில் காணப்படும் முடியை அகற்ற முடியும் என வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி அகற்றப்பட்ட இடங்கள் போக மீதி இடங்களில் தொடர்ந்தும் ரோமம் வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவாம். இவ்வாறு தமக்கு ரோமம் வளர்ந்திருப்பதால் தம்மை எவரும் மணம் முடிக்க வரவில்லை, அது சாத்தியப்படாது என்று இச் சகோதரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளதால், கருணை உள்ளம் கொண்ட பலர் இச் சகோதரிகளுக்கு உதவ முன்வந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.  லேசர் சிகிச்சை மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற ஒருவருக்கு தலா 4,500 பவுண்டுகள் செலவாகும் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. உலகில் தற்போது தேவையற்ற முடிகளையும் ரோமங்களையும் நிலந்தரமாக அகற்ற பலதரப்பட்ட கிரீம் மற்றும் பூச்சு மருந்து வகைகள் இருக்கின்றது. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை இச் சகோதரிகளுக்கு வேலைசெய்யவில்லை. அதாவது முடியை அகற்றும் கிரிம் இவர்களிடம் தோற்றுப்போய் விட்டது என்று தான் சொல்லவேண்டும் !






பாம்பைப் பிடித்து கழுத்தில் தொங்கவிடும் மட்டக்களப்பு இளைஞன்!

 பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.  ஆனால் பாம்புகளை மிக சாதாரணமாகவே கைகளால் பிடிக்கின்றார் ஒரு இளைஞன், கைகளில் வைத்திருக்கின்றார், கழுத்தில் மாலையாக அணிகின்றார்.  பாம்புகள் இவரை கோபிப்பதும் இல்லை, தீண்டுவதும் இல்லை, இவரது கழுத்தை நெருக்குவதும் இல்லை.  இவ்வதிசயம் நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான்.  மட்டக்களப்பில் உள்ளது விளாவெட்டுவான் கிராமம். இங்கு வசிக்கின்ற சாதாரண இளைஞர்களில் ஒருவர்தான் அல்லிமுத்து ஜெயக்குமார்.  ஊரில் உள்ள நாக தம்பிரான் ஆலயத்தில் அவ்வபோது தொண்டுப் பணிகள் செய்து வருகின்றார்.  இதனால் இவருக்கு நாக தெய்வங்களின் அருள் உள்ளது என்றும் ஆகவேதான் பாம்புகள் இவரை ஒன்றும் செய்வதில்லை என்றும் ஊரே விசுவாசிக்கின்றது.








*தத்துவங்கள்,,,,mix