Tuesday, July 3, 2012

* வீடு நோக்கி ஓடிவந்த...



வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)

இனி -
காடு மேடு சொந்தம்
காணும் யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை
என்ன ஆனந்தம்!
இரு காலிருந்தும் கையிருந்தும்
பாரிலே
ஒரு வாலுமில்லை தலையுமில்லை
வாழ்விலே; (வீடு)

இனிக் காற்று மழையிலின்பம்
கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை
எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணிஎண்ணி கதறியென்ன
உலகிலே
ஒரு இனிப்புமில்லை கசப்புமில்லை
முடிவிலே! (வீடு)

                    
எழுதியவர் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

No comments:

Post a Comment