Tuesday, December 18, 2012

வன் தட்டில் ஏற்படும் கோளாருகளை சரி செய்வது எவ்வாறு?



வன் தட்டில் ஏற்படும் கோளாருக��
வருட கணக்கில் பயன்படுத்தப்படும் வன் தட்டுகளில் எராளமான பிரச்சனைகள் இருக்கும். விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள கணினியில் இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக காணப்படும். வன் தட்டில் மென்பொருள்களை நிறுவி உபயோகிப்போம் தேவை இல்லை யெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். 

கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கி விடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்திகளை காட்டும். வன் தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும்.

மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். 

இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். 


புத்தம் புதிய அம்சங்களுடன் கூடிய VLC Media Player



வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை செயற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Media Player மென்பொருட்களுள் சிறந்ததாக கருதப்படுவது VLC Media Player ஆகும்.தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான VLC media player 2.0.5 விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஏனைய அனைத்து இயங்குதளங்களிற்குமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி VideoLAN மற்றும் VLC development குழு ஆகியன இணைந்து உருவாக்கிய இந்த புதிய பதிப்பானது Windows 8, Mac OS, Ubuntu ஆகியவற்றில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.இப்பதிப்பில் MPEG2 கோப்பின் வீடியோ மற்றும் ஆடியோவில் காணப்பட்ட Encoding தொடர்பாக காணப்பட்ட தவறுகள், MKV கோப்புக்கான மேம்படுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளதுடன் Mac OS இற்கான புதிய பயனர் இடைமுகம் மற்றும் விண்டோஸ் 8 இற்கான மெட்ரோ இடைமுகம் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி

ஐபோன்களுக்கென கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய மென்பொருள்




இணையத்தளங்களினூடு வீடியோ கோப்புக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் YouTube தளத்தினை கைப்பேசிகளிலும் பயன்படுத்தும் வசதிகள் காணப்படுகின்றமை அறிந்ததே. இவ்வாறு iPhone - களில் YouTube வீடியோக்களை பார்க்கும் அதேவேளை அவற்றினை பதிவு (Capture) செய்வதற்கான வசதியினை தரும் பிரயோக மென்பொருள் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.iPhone தவிர்ந்த அப்பிளின் ஏனைய சாதனங்களிலும் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை மீண்டும் YouTube, Facebook, Twitter, and Google+ போன்ற சமூகவலைத்தளங்களில் இலகுவாக தரவேற்றம் செய்யவதற்கான வசதிகளும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இணையத்தள முகவரி

உலகின் மிக குள்ளமான நபர்

உலகின் மிக குள்ளமான மனிதராக பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜன்றே பலவிங் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.பிலிப்பைன்ஸின் தென் பிராந்திய நகரான சிந்தாங்கனில் வசிக்கும் ஜன்றேவின் உயரம் 2 அடிகளுக்கும் குறைவாகும். குழந்தைப் பருவத்திற்குப் பின் அவர் வளரவே இல்லை.  இன்று அவரின் உயரம் அளவிடப்படட்டபோது 23.5 அங்குலம் (59.93) சென்ரி மீற்றர் உயரமானவராக இருந்தார்.இதுவரை நேபாளத்தைச் சேர்ந்த 26.4 அங்குல உயரமான கஜேந்திரா தாபா மாகர் உலகின் மிக குள்ளமான நபராக விளங்கினார். அவரைவிட ஜன்றே பலவிங் உயரம் குறைவானவராக இருந்தபோதிலும் கின்னஸ் விதிகளின்படி அவர் உலகின் மிக குள்ளமான நபர் என அங்கீகரிக்கப்படுவதற்கு 18 வயதுவரை காத்திருக்க நேரிட்டது.அதன்படி இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜன்றே  பலவிங்  தனது 18 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியபோது அவர் உலகின் மிகக் குள்ளமான சாதனையாளராக கின்னஸ் சாதனை நூல் வெளியிட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டார். இன்று பிலிப்பைன்ஸின் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.  



34 விரல்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் குழறந்தையொன்று 34 விரல்களுடன் பிறந்ததன் மூலம் புதிய கின்னஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்ஸாட் சக்ஸேனா என்ற இந்த ஆண் குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகிறது.
குறித்த குழந்தையின் இரு கைகளிலும் தலா 7 விரல்கள்  காணப்படுகின்றன. இரு கால்களிலும் தலா 10 விரல்கள் உள்ளன.  மொத்தமாக 34 விரல்கள் காணப்படுவதாக கின்ன உலக சாதனை நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தை கடந்த வருடம் பெருவிரல்கள் இல்லாமல் பிறந்துள்ளது. இந்நிலையில் மேலதிக விரல்களை அகற்றுவதுன்  மூலம் பெருவிரல்களை உருவாக்கும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டனர்.
குறித்த குழந்தையின் தாயான அம்ரிடா சக்ஸேனா இது குறித்துத் தெரிவிக்கையில், 'இந்த குழந்தை எங்களது முதற் குழந்தை. ஆதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.
ஆனால் அவனது விரல்களை பார்த்தவுடன் நான் மிகவும் அதர்ச்சியடைந்தேன்' என்று கூறியுள்ளார்.
மரபணு கோளாறு காரணமாகவே இவ்வாறு விரல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தையொன்று சாதனைப் படைத்தமை  குறித்து இணையத்தளத்தில் பார்வையிட்டதாக அம்ரிடா சக்ஸேனா தெரிவித்துள்ளார்.
'அதன்பின் எனது கணவரும் எனது தங்கையும் இணைந்து இணையத்தளத்தில் எமது குழந்தையின் விபரங்களை பதிவு செய்தனர்' எனவும் அவர் கூறினார்.




உலகின் மிக குள்ளமான பெண்ணான இந்திய யுவதி

உலகில் மிகக் குள்ளமான பெண்ணாக இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜியோதி அம்கே எனும் யுவதி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.இவரது உயரம் 2 அடி 0.06 அங்குலம் மட்டுமாகும்.  இது சராசரியாக இரண்டு வயது குழந்தையின் உயரமாகும்.இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஜெட் ஜோர்டன் எனும் வயது 22 பெண் உலகின் மிகக் குள்ளமானவராக விளங்கினார்.  பிரிஜெட் ஜோர்டன் 2 அடி 3 அங்குலமுடையவர்.ஜியோதி அம்கே,  தனது 18 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில், உலகின் மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டமைக்கான தனது சாதனை  சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.'புதிய உலக சாதனையுடன பிறந்த நாள் கொண்டாடுவது அற்புதமானதாகும். இது உண்மையில் எனது பிறந்த நாள் பரிசு. நான் இந்த உயரத்தைக் கொண்டிருப்பதை பெரிய விடயமாக கருதுகின்றேன். நான் இவ்வாறு குள்ளமாக இல்லாவிடின் நிச்சயமாக இந்த சாதனையை  அடைந்திருக்க முடியாது' என ஜியோதி அம்கே தெரிவித்துள்ளார்.உலக வரலாற்றில் மிக குள்ளமான பெண்ணாக பௌலின் மஸ்டர்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  1895 ஆம் ஆண்டு மரணமடைந்த பௌலின் மஸ்டர்ஸின் உயரம் 2 அடி மாத்திரமேயாகும் 
 
 
 
 
  



Monday, December 17, 2012

Laptop வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும். 
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம். லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள்பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.
SONY 
HP 
DELL 
SAMSUNG 
THOSHIBA 
LENOVA 
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Laptop Configuration
Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7 
Intel Core i5 
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம்.

ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மொடலை விட 2.80 GHz லேப்டாப் மொடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

(4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK
அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஓடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் கொப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும். ஓடியோ வீடியோ கம்ப்யூட்டரில் கொப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஒபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate 
Windows 7 Professional 
Windows 7 Home Premium 
Windows 7 Home Basic 
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது. அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.