Sunday, July 29, 2012
Saturday, July 28, 2012
* கவிதை
நீ விரும்பும்
உயிரிற்கு உன்
அன்பு புரியாது . . .
உன்னையே விரும்பும்
உயிருக்கு
உன்னைத்தவிர
வேறொன்றும் தெரியாது
* கவிதை
மனம் திறந்து பேசு ஆனால்,
மனதில் பட்டதையெல்லாம்,
பேசாதே.....
சிலர் புரிந்து கொள்வார்கள்”
சிலர் பிரிந்து செல்வார்கள்”
* மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
* மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
Friday, July 27, 2012
* கவிதை
கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
அது என் கவலை தீர்க்கும் வரை
உறவுகள் எனக்குப் பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை
உன்ணை எனக்குப் பிடிக்கும்
என் உயிர் பிரியும்வரை...
* கவிதை
வெற்றியை விட தோல்விக்கு
பலம் அதிகம்.
வெற்றி - சிரித்துமகிழ வைக்கும்
தோல்வி -சிந்தித்து வாழ வைக்கும்.....
—
* கவிதை
உன் உருவமில்லாமல்
தொடரும் என் நினைவுகளை
தொலைதூரம் ஆக்கி
என்னை தூரமாக்கி
கொண்ட தூயவனே.....
என்னை நிராகரித்ததின்
பொருள் கேட்டு நித்தமும்
என் மனம் போராடுகிறது...
* கவிதை

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
* கவிதை

புத்தகத்தின் இடையில்
மயிலிறகை சேமித்து வைக்கும்
குழந்தை போல.
நித்தம் உன் நினைவுகளை சேமிக்கிறேன்
என் இதயத்தில்.
* கவிதை

என்னுடன் நீ பேசாத பொழுதுகளிலும் நான் உன்னுடன்
பேசாத்தானே துடித்தேன்...
உன் வார்த்தைகள் என் இதயத்தை எத்தணையே முறை அழவைத்தாலூம்..,
இதயம் உன்னை ஒரு போதும் வெறுத்தது இல்லை.!
* கவிதை

உன்னை நினைத்து நான் அழுத போது என் கண்களில் இருந்து,
வந்த கண்ணீர் ஆறுதல் சொன்னது...
என்றும் நான் மட்டும்தான் உன்னுடன் இருப்பேன் என்று
* கவிதை

உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும்
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை
சுமந்த படி என் காதல் என்றும் வாழும்
Thursday, July 26, 2012
* தாய்...

நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்...
நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்....
நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வர மாட்டாள்
துடிதுடித்து வருவாள்...
அதுதான் தாய்...
* இப்படியும் ஒரு காதல்!!!!

இப்படியும் ஒரு காதல்!!!!
உணர்வுகளின் பரிமாற்றமும் ஒரு புனிதமான
காதல்தான் அன்பர்களே.
எப்படி நாம் கடவுளிடம் உணர்வோடு
வேண்டுகின்றோமோ அதே போல் ஒரு
பெண்ணும் ஆணும் ஒரே உணர்வுகளோடு
பார்க்காமலும் பேசாமலும் காதல் செய்ய முடியும்...
* கனவுக் கன்னி
கனவுக் கன்னி........
...
சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்
சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்
காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்
தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்
மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்
மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்
மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்
மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்
கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்
சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்
என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்
காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்
என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்
விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்
நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?
...
சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்
சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்
காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்
தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்
மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்
மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்
மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்
மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்
கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்
சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்
என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்
காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்
என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்
விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்
நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?
* செல்லமே!
செல்லமே!
உன்
இதயச்சிறையில்
இன்னும் பல்லாண்டு
சிறை வை.
காந்தக் கண்களால்
மீண்டும் மீண்டும்
கைது செய்.
வார்த்தைகளால்
வதை செய்.
பரவாயில்லை
ஈரமில்லாமல் நட
ஏனென்று
கேட்கமாட்டேன்.
கனவுகளையெல்லாம்
கலைத்துப் போடு.
கலங்கமாட்டேன்.
உண்ண எதுவுமே தராதே!
பசித்திருப்பேன்.
உயிருள்ளவரை உறங்க விடாதே!
விழித்தே இருப்பேன்.
தாகத்திற்கு தண்ணீர் கூட தராதே!
நாவறண்டு துடித்தாலும்
உயிரோடிருப்பேன்.
என்
சோகத்தில் கூட
சேர்ந்து அழாதே!
உனக்காகவும்
நானே அழுவேன்.
இதயத்தில் இடமில்லை
என்று சொல்!
ஏற்றுக் கொள்வேன்.
சிலுவையில் ஏற்றி
பல நூறு முறை
ஆணி அடி.
அப்போதும் சிரிப்பேன்
உனக்காக
ஆனால்
அன்பே
நீ மட்டும்
புன்னகைக்க மறக்காதே!
இந்தச்
சிறைப்பறவைக்கு
உன்
புன்னகையால் மட்டும்
சுவாசம் கொடு.
உன்னைச் சுவாசித்தபடி
இன்னும் நூறாண்டு
வாழவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)