Thursday, December 20, 2012

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு



நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறதுமற்றும் mac இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் personalize என்பதை தேர்வு செய்யுங்கள். அதில்installed themes என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் மூளையின் வயதை கண்டறிவதற்கு

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயது தானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த முகவரிக்கு சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி(விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும்.
முதலில் எளிதாக இருந்தாலும், போகப் போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
அடுத்த பிரிவு அடென்ஷன்(Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு மொழி(Anagrams): எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.
இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.

வைரஸ் தாக்கத்திலிருந்து கணனிகளைப் பாதுகாக்க ஒரு இலவசமான மென்பொருள்


இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக தொழிற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் செய்நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் நிகழ்நேர (Real Time) பாதுகாப்பைக் தரக்கூடிய இம்மென்பொருளிற்கான Update - களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

அச்சுப்பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கான் செய்து மென்பொருள்



தற்போதைய காலகட்டத்தில் எந்தவொரு நடவடிக்கையும் கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவற்றின் அடிப்படையில் புதிதாக வெளியிடும் பல்வேறு புத்தகங்களும் அச்சிட்டு வெளியிடுவதை குறைத்து கணினியில் பயன்படுத்தக்கூடியவாறு மின் புத்தகங்களாகவே (eBook) வெளியிடப்படுகின்றது.
அதே போல அச்சுப்பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கான் செய்து மின் புத்தகங்களை உருவாக்க முடியும். இதற்கென iReador eBook Converter எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இவை நிழற்படங்களாகவோல் அல்லது எழுத்துருக்களாகவே ஸ்கான் செய்யப்பட்ட கோப்புக்களை PDF, ePUB, Mobi போன்ற மின்புத்தக கோப்புக்களாக மாற்றியமைக்க உதவுகின்றது.
இதன் பயனர் இடைமுகமானது எளிமையானதாகக் காணப்படுவதால் பயன்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

Android Explorer: விண்டோஸ் கணனிகளில் அன்ரோயிட் சாதனங்களை இயக்குவதற்​கு

 அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களை விண்டோஸ் கணனிகளுடன் இணைத்து பணியாற்றுவதற்கு Android Explorer எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இம்மென்பொருளின் உதவியுடன் அன்ரோயிட் சாதனங்களிலுள்ள கோப்புக்களை ஒழுங்குபடுத்த முடிவதுடன், தேவையான மென்பொருட்களை நிறுவுதல் மற்றும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் HTC, Samsung, Google Nexus, Motorola போன்ற கருவிகளுக்கு இவை ஒத்திசைவாக்கம் உடையதாகக் காணப்படுவதுடன் Windows 64-bit, Windows 32-bit ஆகியவற்றிற்கென தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது எப்படி?

விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது

நான் முன் பதிவில் கூறியபடி கூகுள் ஆண்டவர் துணையுடன் விண்டோஸ் 8-ஐ டோரண்ட் வடிவில் தேடியபொழுது ஒரு சில டோரெண்ட்டுகள் கிடைத்தது. நான்
ஏன் டோரண்ட் ஃபைலை தேடினேன் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். பெரிய ஃபைல்களை சாதரணமாக டவுன் லோடு செய்வது இயலாத காரியம். 

காரணம் கரண்டு போனாலோ அல்லது இண்டர்நெட் டிஸ்கனெக்ட் ஆனாலோ, அதுவரை நாம் டவுன்லோடு செய்தது எல்லாம் டெலிட் ஆகிவிடும். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே டவுன் லோடு செய்ய வேண்டும். அதனால் சினிமா டி.வி.டி, விடீயோ போன்றவற்றை டோரண்ட் ஃபைலாக கன்வெர்ட் பண்ணி அப்லோடு செய்து விட்டால், U Torrent, Bit Torrent போன்ற டோரெண்ட் கிளையண்ட் மூலம் டவுன்லோடு செய்ய வசதி. 

நாம் கம்பியூட்டரை ஆன் செய்திருக்கும் பொழுது(இண்டர் நெட் இணைப்பு இருந்தால்) தானாகவே தொடர்ந்து டவுன்லோடு ஆகும். ஆஃப் செய்துவிட்டால், அதுவரை டவுன்லோடு செய்தது அப்படியே இருக்கும். அடுத்த முறை ஆன் செய்யும் பொழுது தொடர்ந்து டவுன்லோடு ஆகும்.

நான் U Torrent இன்ஸ்டால் செய்திருக்கிறேன். கூகுள் சர்ச்சில் கிடைத்த விண்டோஸ் 8 டோரெண்ட் ஃபைல் "Windows 8 Pro VL(x86+x64) Untouched DVD(EN) + Permanent Activator"ஆகும். அதாவது விண்டோஸ் 8 புரபொஷ்னல் - வி. எல் என்பது வால்யூம் லைசென்ஸ் என்பதாகும். இது போன்ற லைசென்ஸ் கம்பியூட்டர் தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பியூட்டர்களில் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பிரி இன்ஸ்டால் செய்வதற்கு மைக்ரோஸாப்டால் வழங்கப்படும் லைசென்ஸ் ஆகும். இந்த ஓ. எஸ்-ல் ப்ராடக்ட் கீ அதனுள்ளே இருக்கும். எனவே ஒரு டிவிடியை வைத்து எத்தனை கம்பியூட்டரிலும் இன்ஸ்டால் செய்யலாம். 

அதன் பின் இந்த கம்பியூட்டர்களை மைக்ரோ ஸாஃப்டின் ஆக்டிவேட்டர் சாப்ட்வேர் மூலம் ஆக்டிவேட் செய்யும் பொழுது, கம்பியூட்டர் கம்பெனியின் கணக்கில் அது சேர்க்கப்படும். அதன் அடிப்படையில் கம்பெனி மைக்ரோசாஃப்ட்டுக்கு பணம் கொடுக்கும். எனவே இதற்கு 25 இலக்க கீ கிடையாது.

x86,x64 என்பது 32 பிட், 64 பிட் ப்ராஸசரை குறிக்கும்.

நீங்கள் ஒரிஜினல் Windows 8 Professional -ஐ உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து பெர்மனெண்ட் ஆக்டிவேஷன் செய்ய விரும்பினால் முதலில் உங்கள் கம்பியூட்டரில் U Torrent-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய இந்த லிங்கைகிளிக் செய்து "U Torrent Stable (3.2.3 Build 28705) என்பதை டவுன் லோடுசெய்யுங்கள். இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

அடுத்தபடியாக இந்த லிங்கை கிளிக்செய்யுங்கள். Extra Torrent பக்கம் திறக்கும். அதில் Download (Download Torrent) என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ஒரு சிறிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் இருக்கும் ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள். டோரண்ட் டவுன்லோடு ஆகி வேறு ஒரு பேஜ் தோன்றும். அதில் எந்த டிரைவில் டோரண்ட் பைலை சேமிக்க வேண்டுமோ அதை மார்க் செய்து ஓகே கொடுங்கள். இனி யூடோரண்ட் பேஜ் தோன்றி அதில் விண்டோஸ்8 பைஃல் சேர்ந்து விடும். அதன் பின் அந்த பைஃல் டவுன்லோடு ஆக ஆரம்பிக்கும். இந்த பைஃலின் அளவு 2.23 ஜி.பி ஆகும். இது முழுவதும் டவுன் லோடு ஆக எப்படியும் 5-6 மணி நேரம் ஆகும். இது இண்டர்நெட் ஸ்பீடை பொறுத்தது.

டவுன்லோடு ஆகும் பைஃல் WIN RAR பார்மெட்டில் இருக்கும். நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் வின்ரேர் இண்ஸ்டால் செய்திருக்கவில்லை என்றால் இந்த லிங்கைகிளிக் செய்து என் டிராப் பாஃக்சில் இருந்து டவுலோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

டோரண்ட் பைஃல் முழுவதும் டவுன்லோடு ஆனவுடன் அதை வின்ரேர் மூலம் எக்ஸ்டிராக்ட் செய்யுங்கள். இப்பொழுது விண்டோஸ் 8 டிவிடியின் இமேஜ் பைல்,பெர்மனெண்ட் ஆக்டிவேட்டர், எப்படி இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை விவரிக்கும் வீடியோ ஆகியவை இருக்கும். 

நீங்கள் இமேஜ் பைஃலை டிவிடியில் ரைட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். அல்லது யு.எஸ்பி பென் டிரைவில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யலாம். பெண்டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் மைக்ரோசாஃட்டின் " Windows 7 USB -DVD -Tool" ஐ இந்த லிங்கை கிளிக் செய்து அதில் இன்ஸ்டலேஷன் என்ற தலைப்பின் கீழ் windows7 usb dvd download tool என்ற சிகப்பு நிற வாசகத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யுங்கள். 

பென் டிரைவ் குறைந்த பட்சம் 4 ஜி.பியாக இருக்க வேண்டும். பென் டிரைவை சிஸ்டத்தில் இணைத்துவிட்டு, டெஸ்க்டாப்பில் இருக்கும் யூ.எஸ்பி டூல் ஐகானை கிளிக் செய்யுங்கள். பேஜ் தோன்றும். அதில் கேட்டுள்ள படி யூ எஸ்பி, இமேஜ் பைல் ஆகியவற்றை தெரிவு செய்து ஓகே கொடுத்தால் விண்டோஸ் இமேஜ் பைஃல் யூ.எஸ்பியில் இன்ஸ்டால் ஆகிவிடும். 

இனி இந்த யூ.எஸ்.பியை இணைத்தபடியே சிஸ்டத்தை ரிஸ்டார்ட் செய்து பூட் மெனுவில் யூ எஸ்பி என பூட் ஆஃப்ஷனை தேர்வு செய்துவிட்டால் போதும். விண்டோஸ் 8 இன்ஸ்டால் ஆகிவிடும். அதன் பின் பெர்மனெண்ட் ஆக்டிவேட்டரை ஓடவிட்டால் ஆக்டிவேட் ஆகிவிடும். இதை தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும். 

முடிந்தது கதை............... 

Tuesday, December 18, 2012

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!

மலைப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
இதைக் கண்டெடுத்த ஆய்வாளர்களுக்கு குறித்த சிறுமியின் உடல் அதிர்ச்சி தரும் விடயமாக காணப்பட்டது. இவ்வுடல் மம்மி போன்று பதப்படுத்தப் படவில்லை .. 
ஆனாலும் தோல் இதயம் நுரையீரல் போன்ற தசைகள் உருக்குலையாது இன்னமும் காணப்படுகின்றன. 
மதரீதியாக உடலை பாதுகாக்க எதோவொரு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 
இன்கா (inca) எனும் இனத்தவர்கள் கடவுளின் கட்டளைப்படி சிறுவயதில் இறப்பவர்களை மீளாத உறக்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் போது இறந்த உடலானது இருந்த நிலையில் உறக்கத்திற்கு தயார் செய்யப்படுகிறது. 
இவர்களின் நடைமுறை எகிப்திய மம்மிகளின் உருவாக்கத்தில் இருந்து வேறுபட்டது. இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் இங்கு வாழ்ந்து அழிவடைந்த இன்கா இன மக்களின் வரலாறு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.