Tuesday, January 15, 2013

* கண்களை பாதுகாக்க Software ?



 
 
நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.

அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.



பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.



நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கமுடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.




இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.


இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று


1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windows ல் locate என்பதை கிளிக் செய்து வரும் map ல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitude னை copy செய்து அதில் தரவும்.


3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

Download செய்ய இங்கே click செய்யவும் :flux

* உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு...!



 
 
இணையத்தில் எவ்வளவு தான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.

உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.


இத்தகைய ஆபாச தளங்களை உங்கள் கணணியில் தடுக்கலாம். மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும்.


கீழே தரப்பட்ட இணையதளத்தின் வழிமுறைகளை பின்பற்றவும்.


இந்த செயல் முறை விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும். விண்டோஸ் ஏனைய பதிப்புகள், மாக் லினக்ஸ் மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றில் ஆபாச தளங்களை தடுக்க கீழே உள்ள தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினை கொடுத்து தளத்தின் உள்ளே சென்று பெறலாம்.

இணையதள முகவரி :https://store.opendns.com

*எழுத்துக்களில் Animation உருவாக்குவதற்கு!



எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளிதாக Animation உருவாக்கலாம். இத்தளத்திற்கு சென்றவுடன் Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.

Font type, Font size, Background color, Direction(new), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற button அழுத்த வேண்டும்.


நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற button அழுத்தி Gif கோப்பாக நம் கணணியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.


இணையதள முகவரி : Textanim

* புதிய வசதிகளுடன் கூடிய Google Chrome 24.0-வை தரவிறக்கம் செய்வதற்கு


இன்றைய உலகில் அதிகளவான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் உலாவி கூகுள் குரோம்.
கூகுள் தன்னுடைய பயனாளர்களுக்காக புத்தம் புது வசதியை நாள்தோறும் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகளுடன் கூகுள் குரோம் 24.0.1312.52 வெளியாகி உள்ளது.
நீங்கள் குரோம் உலாவி பயன்படுத்தும் நபராக இருப்பின், குரோம் உலாவியில் Go to Crunch >> About Google Chrome சென்று Update என்பதை கிளிக் செய்யவும்.
விண்டோஸ் - தரவிறக்க சுட்டி
அன்ட்ராய்டு - தரவிறக்க சுட்டி

* Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பு

விரைவான தேடல் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியதன் காரணமாக அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது Firefox 19 எனும் பெயருடன் கணினிகள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் HTML5 மொழியில் உருவாக்கப்பட்ட PDF Viewer வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்புதிய பதிப்பினை Windows, Mac OS, Linux ஆகியவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்டுள்ளதுடன் அன்ரோயிட் கைப்பேசிகளில் நிறுவுவதற்கு அவை குறைந்தபட்சம் 600MHz Processor, 512MB RAM மற்றும் HVGA ஆகியவற்றினை கொண்டிரு்கக வேண்டும்.
தரவிறக்கச் சுட்டி
Mac OS  

* கணினி வன்பொருள் பற்றிய தகவலை பெறுவது எப்படி.

கணினி வன்பொருள் பற்றிய தகவலை பெறுவது எப்படி.

HWiNFO32 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள்,

கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் தகவல்களை ஒரு தருக்க மற்றும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்கப்படுகிறது.
அம்சங்கள்: 
  • விரிவான வன்பொருள் தகவல்கள்
  • கணினி சுகாதார கண்காணிப்பு
  • அடிப்படை வரையறைகளை
  • உரை, CSV, XML, HTML, MHTML அறிக்கை படிமம்
  • பருவ மேம்படுத்தல்கள்
இயங்குதளம்: விண்டோஸ் 9x/2000 / XP / சர்வர் 2003/Vista/Server 2008/Windows 7

* ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!


* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.