Wednesday, May 1, 2013
* மனமும் மனிதமும்
ஐயா தருமம் சாமி.....
பிச்சை கேட்கிறான் பிச்சை காரன்..
மனம் சொல்லியது
பத்து ரூபாய் கொடு பாவம்
அவன் முகத்தை பார் என்று ...!!
மனிதம் சொல்லியது
பக்கத்தில் இருப்பவனை பார்
பத்து ரூபாய் பிச்சை போட்டால்
உன்னை பைத்தியமென எண்ண போகிறான் என்று...!!!!
இறுதியில் மனிதம் ஜெயிக்கிறது
ஒரு ரூபாய் நாணயத்துடன் திரும்புகிறான்
பிச்சை காரன்......
* புதுமணத் தம்பதியருக்குள் சண்டை வர காரணங்கள்
புதிதாய் திருமணமானவர்கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வருவது சகஜமான ஒன்றுதான். சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடுமையாக, பெரிய விஷயங்களாக இருக்கும். ஆனால் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வரும் சண்டைகளோ சிறு சிறு காரணங்களாகவே இருக்கும்.
அந்த சண்டைகளும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும். மேலும் அந்த திருமணமான தொடக்கத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்து கொள்ளாததாலும் வரும் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். திருமணம் ஆன முதலில் இருவரும் முதன் முறையாக ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் வீட்டில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது.
உதாரணமாக, காலையில் லேட்டாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல் கூட துலக்காமல் பால் குடிப்பது, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும்.
மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளானது வரும். திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்களை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள்.
அவ்வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதையே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும். மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோஷத்தில் அலுவலகத்தில் இருக்கலாம்.
ஆனால் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ்வாறு லேட்டாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்துவிடும். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பை விட, அவர்களை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.
இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததால், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்காமல் போக, அந்த நேரத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப் போய் விபரீதம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.
ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும் என்று கூறுகின்றனர்.
* அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்
பெண்கள் என்னதான் மாங்கு மாங்கென்று மாதக்கணக்கில் உழைத்தாலும் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக வேலை பார்த்தலும் அவர்களை விட குறைவான கூலியே பெறுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. கூலித் தொழில் தொடங்கி விண்வெளிப் பயணம் வரை ஆண்களுக்கு இணையாக இன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் கால்பதிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் அவர்களாலும் பார்க்க முடிகிறது. ஏன் ஆண்களை விட அதிபுத்திசாலிகளாகவும் பெண்கள் உள்ளனர். உண்மையில் ஆண்களை விட திறமையாகவே பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சம்பளம் என்று வரும்போது மட்டும் ஆண்களை விட குறைச்சலாகவே பெண்களுக்கு தருகிறார்களாம். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் லேக்ஹெட் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஒரே வேலை பார்த்தாலும் ஆண்களை விட குறைவான சம்பளம்தான் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. மட்டம் தட்டும் ஆண்கள் சில இடங்களில் ஒரு வேலையில் ஆண்கள் குறைவாக இருந்து, பெண்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அப்போது பெண்களுக்கு நல்ல ஊதியமும், விரைவிலேயே பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
இல்லாவிட்டால் பெண்களை வளர விடுவதே இல்லையாம் இந்த ஆண்கள். அதேசமயம், ஆண்களும், பெண்களும் ஒரு இடத்தில் சம அளவில் பணியில் இருந்தால் ஆண்கள்தான் வேகமாக முன்னுக்கு வந்து விடுகிறார்களாம். பெண்களை மட்டம் தட்டித் தட்டி கீழேயே வைத்து விடுவார்களாம். ஒரே வேலை பார்க்கும் ஆண், பெண் இரு பாலினரில், ஆண்களுக்கு அதிக சம்பளமும், அவர்களை விட பெண்களுக்கு குறைந்த சம்பளமும் தரப்படுவதாக கருத்துக் கணிப்பில் தகவல் கிடைத்துள்ளது.
கூடுதலாக உழைக்கும் பெண்கள் ஜப்பான், செக், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை பார்க்கின்றனராம். அதாவது கூடுதலாக உழைக்கின்றனராம். இந்தியாவிலும் அதேநிலைதான்.
இந்தியாவிலும் கூட கட்டிடத்தொழிலாளர்களுக்கு பெண்களுக்கு குறைந்த கூலியும், ஆண்களுக்கு அதிக கூலியும் கொடுக்கப்படுகிறது. சில அலுவலகங்களில் ஒரே வேலையை ஆண்களும், பெண்களும் பார்த்தாலும் ஆணுக்கு ஒரு சம்பளமும், பெண்ணுக்கு ஒரு சம்பளமும் தரப்படுகிறது என்கின்றனர் பெண்கள்.
* சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.
இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.
3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.
5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!
6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.
7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.
8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

* காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி?
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி?
ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது.
இதை காதல் என்று சொல்லலாகாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
1. அதிர்ச்சி
தொடக்கத்தில், நம் துணைவர் இன்னொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம். இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.
2. ஆத்திரம்
அது 'கெட்ட கனவும்' இல்லை வெறும் ஒருவித பிரம்மையும் அல்ல, அது உண்மைதான் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மறுப்பீர். வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், சதா காதல் நினைவையே மனம் நாடும்.
நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.
3. கோபம்
இந்த கட்டத்தில், ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது.
அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.
4. நினைவு சின்னங்கள்
உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ரெஸ்டாரென்ட், இல்லையேல் அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.
5. புது உறவு
இப்படிப்பட்ட சம்பவம் நடந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் மணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.
6. இலக்குகள்
காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும். ஆகவே எப்போதும் நம்மை நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம்.
வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். நிறைய கற்று கொள்ள நேரிடும். ஒவ்வொருவரையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும். எனவே காதல் தோல்வி ஏற்பட்டால், அவற்றை மறந்து, நம் வாழ்கையை தொடர நமக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்கும் நம் நண்பர்ககளோடு சேர்ந்து சிரித்து பேசி வாழ்கையை அனுபவியுங்கள்.

Subscribe to:
Posts (Atom)