Wednesday, May 1, 2013

* கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்


திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.

* குப்பைத்தொட்டியில் குழந்தை



காதல் என்ற போதையிலே.
பாதை தவறி போனவரே.

காதலன் என நம்பி
காமுகனிடம் சிக்கியவரே.

கலவி என்ற சுகம் கண்டு
கற்ப்பிழந்து போனவரே.

கொண்டவன் கை கழுவ
கலங்கி இதயம் வெடித்தவரே.

கற்பு என்பது சொல் அல்ல
காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

காமம் என்ற ஒரு சொல்லில்
உலகம் அது இயங்கவதில்லை.

தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

தொப்புள் கொடி அறுத்த உடனே
சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.

அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.


* ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் !



1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5 இவரது வங்கி நிலுவை 0

6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .

7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்

11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் ..

இதுக்கும் இருக்காங்களே நம்ம நாட்டு தலைவர்கள்..
இனி எதிர்காலத்திலாவது இது போன்ற நல்ல தலைவர்கள் வர பிராத்திப்போமாக !!!

இந்த நல்ல கருத்துக்களை நம் நண்பர்கள் மத்தியில் பரப்ப SHARE செயுங்கள் !!


* பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா உனக்கு…?



பேஸ்புக்ல என்ன என்ன
ஒருநாளைக்கு பண்ணனும்ன்னு தெரியுமா உனக்கு ????
ஒரு பக்கம் குறூப்ல போஸ்ட்
போடணும்…
அதே நேரம் என் wall ல போஸ்ட்
போடணும்….

குறூப்ல போஸ்ட் போட்டால்
அதுக்கு கீழ கமெண்ட்ஸ்
போடுறவங்ககூட
மொக்கை போடணும்….

wall ல போஸ்ட் போட்டால்
அதுக்கு கீழ கமெண்ட்ஸ்
போடுறவங்ககூடவும்
மொக்கை போடணும்…

வாற
போட்டோ டாக்கிங்க்கு லைக்
அன்ட் கமெண்ட்ஸ் போடணும்…
பேஜ்க்கும்
ஏதாவது போட்டோ ரெடி பண்ணி போடணும் ..
கவர் போட்டோ பிரோபைல்
போட்டோவேற
ஒவ்வொரு நாளும்
மாத்திக்கிட்டிருக்கணும்
வாற ரிக்குவஸ்ட்
ஓகே பண்ணனும் ….

சாட்டிங்ல மாட்டுற
பிகரோட கடலை போடணும் …
joke
பண்ணினவனுக்கு திருப்ப
joke பண்ணனும் …

பிறந்தநாளுக்கு வாழ்த்தனும் ….
அடுத்தவன் போஸ்ட்க்கும் லைக்
கமெண்ட்ஸ் போடணும் ….
யப்பப்பப்பா……….. ஒரு நாள்
பேஸ்புக் லாக்கிங்
பண்ணினால் எவிளோ வேலை ….

ஆனால்
எங்களுக்கு கிடைக்குற
பெயர் ”
வெட்டியா பேஸ்புக்ல
இருக்கான் “”

# கொய்யாலே …. நாங்க
பேஸ்புக்ல இருக்கிற
டைம்க்கு பேஸ்புக் ஓனர் கூட
பேஸ்புக்ல இருக்க
மாட்டான் … அப்பிடியான
எங்களை ”
வெட்டியா பேஸ்புக்ல
இருக்கான் ” ன்னு சொல்ல வாய்
கூசல ?? ராஸ்கல்ஸ்
இப்போயாச்சும்
புரியுதா நாங்க
எம்பூட்டு பிஸின்னு ??

* சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் !



சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் !


பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.

மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.

என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.

இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள்இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.

நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர்

* அரேபியாவில் ஆடு மேய்த்தவர்...



நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.
அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..


“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண் டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன். அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தரு வோம்.’ என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது.
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன். அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.
“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.

ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது. அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களே..ங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.

இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.

டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்.. “தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்.
- கபிலன்p

எனது அன்பான கணவனுக்கு !



எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன்.

என்னை நம்புங்கள்! நான் எப்படி இதை எழுதுவது? நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை அடைந்த பின்னரும என்னால் எப்படி எனது உளக்குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். இது ஏனென்று உங்களுக்கு தெரியுமா? நாமிருவரும் ஓருடலும் ஈருயிருமாக அல்லவா இருந்தோம்? எதற்காக எமது வாழ்வு இப்படியான ஒரு அவல நிலையை அடைந்தது? நமது வாழ்க்கையை வழப்படுத்த வேண்டிய சுபிட்சத்தை நாம் ஏன் இழந்தோம், நாமிருவரையும் பிரித்து வைப்பதில ஷைத்தான் வெற்றி பெற்றுவிட்டான். ‘உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறிய உனது மனைவி எந்தப்பயனும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க காரணமாக இருந்து விட்டாள்’ என்று உங்களை நம்பவைத்து விட்டான் அந்த ஷைத்தான்.

உங்களது இரண்டாவது வாரிசான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அப்போதே நான் நினைத்தேன் இது பெண் குழந்தை என்பதற்காகத் தான் நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு பெண் அந்த நேரத்தில் படும் வேதனையை நீங்கள் நன்றாக அறிந்திருந்தும் என்னை ஆறுதல் படுத்துவதற்காவது நீஙகள் வரவில்லை. ஒவ்வொரு மனைவியும் அந்த நேரத்தில் கணவனின் வருகையை எதிர்பார்ப்பாள். ஆனால் அந்தப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அது என்னை பெரிதும் பாதித்தது.

நான் உங்களிடம் மனம் வருந்திய போது நான் நினைத்திருக்கவில்லை நாம் இன்றைக்கு வாழும் நெருக்கடி மிக்க வாழ்க்கைக்கு இது தான் ஆரம்பம் என்று! என்றாலும் பின்னர் நீங்கள் இதை எண்ணி வருந்தினீர்கள். எனது உணர்வை புரிந்து கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நமக்கு அல்லாஹ் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பாக்கியமாக தந்த போது நான் அவமானத்தையும், இளிவையும், பரிகசிப்பையும் தவிர வேறு எதையும் பெறவில்லை. நீங்கள் ஒரு நாள் சொன்னீர்கள் உனக்கு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் தெரியும் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு இந்த வீட்டில் எந்த உரிமையுமில்லை என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தில் ஈட்டியால் குத்திய வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளை நீங்கள் மறந்திருந்தாலும் எனது உள்ளத்தை விட்டு அவைகள் மறைந்து விடவில்லை. என்னைப் பெற்றெடுத்த எனது அன்பு தந்தை மரணிக்கும் வரை நோயிலே இருந்தார். அவரை இறுதி வரையிலும் பார்க்க விடாமல் என்னை தடுத்தீர்கள்…

என் அன்புக் கணவரே! உங்களுக்கு ஏன் இந்த கல் மனம்? உங்களின் இந்தக் கோபத்தையும் அடக்கு முறையையும் என்னால் தாங்க முடியுமா என்ன?

எனது அன்புக் கணவரான உங்களின் மேலான கவனத்திற்கு நான் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்த போது அது ஆண் குழந்தை இல்லை என்ற உடன் உங்களைவிட அதிகம் நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் அது பெண் குழந்தை என்பதற்காகவோ அல்லது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறைகாண வேண்டும் என்பதற்காகவோ அல்ல! மாறாக உங்கள் மீது எனக்குள்ள இரக்கத்தினாலும் உங்களின் உணர்வைப் புரிந்துகொண்டதாலும், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் தான். இதனை நீங்கள் என்னை சொல்லாலும், செயலாலும் நோவினை செய்த போதெல்லாம் நான் பொறுமை காத்ததன் மூலம் நீங்கள் மிக தெளிவாக புரிந்திருப்பீர்கள்…

உண்மையில் என்னை நம்புங்கள்! நான் ஏதோ ஒரு பாவம் செய்தவிட்டேனோ தவறிழைத்து விட்டேனோ என்றெல்லாம் எண்ணினேன். சில வேளை உங்களது கவலைக்கும் மன உளைச்சலுக்கும் நான் தான் காரணமோ, என்னை நம்புங்கள்! ஆண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டுமென்ற உங்களின் கனவுக்கு நான் தான் தடைக்கல்லாக அமைந்து விட்டேனோ என்று கூட நான் எண்ணியதுண்டு. உங்களது உணர்வு இப்படி ஆனதனால் உங்களது உரிமை விஷயத்தில் நான் ஒரு பாவியாகி விட்டேனா என்று எண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு…

எனது அன்பான கணவரே! நீங்கள் எண்ணுவது போன்றுமல்ல, நான் அதற்குக் காரணமும் அல்ல… இவை அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடும். அவனின் விருப்பமும் அவனது களா கத்ருமாகும். எதற்காக நீங்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என்றால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை?

சில நேரம் இதற்கெல்லாம் நீங்கள் கூட காரணமாக இருக்கலாமல்லவா? அல்லது ஆணையோ பெண்ணையோ பெற்றெடுக்க முடியாத மலடனாகவோ அல்லது மூளை குறைபாட்டுடனோ, அல்லது அங்கவீனமான பிள்ளைகளையோ தந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது ஆண் பிள்ளைகளைத்தான் தந்த பின்னர் அப்பிள்ளைகள் பெற்றோருக்கு நோவினை செய்கின்ற கேடு கெட்ட பாவிப்பிள்ளைகளாக அவர்கள் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதிக மனிதர்கள் இவை அனைத்தையும் அனுபவிக்க அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் இம்மகத்தான அருட்கொடைக்கு ஏன் அவனை புகழக்கூடாது?

இந்த அருளுக்கு ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடாது? அல்லாஹ் அவனது திருமறையில்,

(வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்). (அஷ்ஷுரா-49.50).

நிச்சயமாக பெண் பிள்ளைகள் அல்லாஹ் அருளிய மிகப்பெரும் கொடை! யார் அப்பெண் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்களோ அல்லாஹ் அவர் மீது அருள் புரிகிறான் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லவில்லையா?

(தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை பரிசளிக்கிறான்) என்றால் பெண் மட்டுமே என்றும் (தான் நாடியவர்களுக்கு ஆண் மக்களை பரிசளிக்கிறான்) என்றால் ஆண் மட்டுமே (அல்லது ஆண் பெண் இருவரையும் என்றால்) சிலருக்கு ஆண் பெண் இரு சாராரையும் கலந்தும் என்றும் (தான் நாடினால் மலடாக்குவான் என்றால்) அவர்கள் யாரையுமே பெற முடியாதவர்களாக்கி விடுவான் என்பது கருத்தாகும்.

நிச்சயமாக அறிந்தவன் சக்திபெற்றவன் என்றால்) அனைத்தையும்) அறிந்தவன் யாவற்றையும் செய்பவன் அவனேயாவான்.

எனது அன்புக்குரிய கணவரே! எந்த சக்தியுமற்ற எதையுமே செய்ய முடியாத மிகவும் பலவீனமான என் மீது ஏன் இவ்வளவு கோபத்தை கொட்டுகிறீர்கள்?

எதற்காக பெண் பிள்ளைகளினால் எந்த மரியாதையையும் அடைய முடியாது என்று எண்ணி அவர்களை வெறுத்தொதுக்கிய (ஜாஹிலிய்யா) அறியாமை கால மக்களுக்கு ஒப்பாகிறீர்கள்?

அப்பெண்கள் அவமானத்தையும் இழிவையும் தருவார்கள் என்று எண்ணினார்கள். அல்லாஹ் அவனது திருமறையில்

(இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாரயங் கூறப்பட்டால். கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க. அவன் முகம் (துக்கத்தால்) கறுத்தாக ஆகி விடுகிறது.) அந்நஹ்ல்-58.59.

எனது அன்பு கணவரே! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்த அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) மக்களுக்கு ஒப்பாகுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

நபி மொழிகளில் (சுன்னாவில்) பெண் மக்களின் சிறப்பு:
நல்ல (சாலிகான) மனிதர்களுடன் சுவர்க்கத்திலே கொண்டு போய் உங்களைச் சேர்ப்பிப்பதற்கு காரணமான பெண் பிள்ளைகளை ஏன் வெறுக்கின்றீர்கள்? ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்ச்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும் என்பதை பின்வரும் நபி மொழிகள் உணர்த்துவதை நீங்கள் அறியத் தவறிவிட்டீர்கள்.

1) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் அவர்களுக்கு எதையாவது (உண்ணக்) கொடுக்குமாறு கேட்டவளாக வந்தாள். ஆனால் ஒரு பேரிச்சம் பழத்தை தவிர வேறு ஏதும் என்னிடத்தில் இருக்கவில்லை. அதை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதில் எதனையும் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்தாள். பின்னர் அப்பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் நபிகளார் ( ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். இச்செய்தி பற்றி அவர்களுக்கு சொன்ன போது சொன்னார்கள்.

‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில், ‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் (அப்பெற்றேர்) சோதிக்கப்படும் போது அதை பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள்’

2) மேலும் ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் என்றார்கள்.’ (ஆதாரம் முஸ்லிம்).

3) நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’ அறிவிப்பவர் (அனஸ் (ரழி), ஆதாரம் முஸ்லிம்).

இமாம் திர்மிதிக்குரிய ஓர் அறிவிப்பில்’ எவரொருவர் இரண்டு அடிமைப் பெண்களை பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கிறார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்றாக சேர்த்து காட்டினார்கள்.’ இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹான தரத்தையுடைய ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

4) ‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி).

இப்னு மாஜாஹ், ஹாகிம், இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.

5) ‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்;மிதி).

இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்.

6) ‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது’ என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் (றழி), ஆதாரம்: அஹ்மத்.

இதை இமாம் அல்பானி (ரஹ்) இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.

எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா?

உங்களுக்குத் தெரியாதா?

- அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று.

- அவர்கள் தான் நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா?

கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு அதில் இரக்கம் நிரம்பியுள்ளது! எவ்வளவு கள்ளங் கபடமற்ற தூய்மையான மனது!!?

இதை இன்னும் இளகுவாக நீங்கள் புரிந்து கொள்வதாயின், நீங்கள் நோய் வாய்ப்பட்டு கட்டில் படுக்கையாக கிடந்த போது எவ்வளவு அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்?

சிந்தித்தீர்களா?

- உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை.

- வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

- அவர்களது கல்வித் திறமையையும், அவர்களது வெட்க உணர்வையும் ஹிஜாப் அணிவதில் அவர்களது ஆர்வத்தையும் பார்த்தீர்களா?

- உங்களுக்கு எவ்வளவு வெட்க்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்கவில்லையா?

இறுதியாக எனது அன்பான கணவருக்கு நீங்கள் அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாவதை விட்டும் எச்சரிக்கை செய்கிறேன். மாறாக அல்லாஹ்வின் பால் ஒதுங்கி விடுமாறு கேட்கிறேன். அவனது அன்பின் பால் சாய்ந்துவிடுங்கள். அல்லாஹ்விடம் அஞ்சிக் கெஞ்சி துஆ கேடபவர்களின் துஆவை கேட்கவும் உங்களது துஆவுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான். நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கும் அவனது அருளில் உங்களுக்கு அருள் புரிவான். அவன் கூறுகிறான்,

(மேலும் (நபீயே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக,) நிச்சயமாக நான் , (அவர்களுக்கு) மிகச்சமீபமாகவே இருக்கிறேன். அழைப்பவரின் அழைப்புக்கு- அவர் என்னை அழைத்தால் நான் பதில் அழிப்பேன்., ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.(ஆல்பகரா,186)

எல்லாம் வல்ல அல்லாஹ் ஸாலிஹான பிள்ளைகளை அருளி, பெண் பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் நமக்கு கண் குளிர்ச்சியை தருவானாக!

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹூ

இப்படிக்கு உங்களது இஃலாஸான மனைவி.