Monday, January 14, 2013

* விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்



தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.

தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.

ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.

அந்த தவறை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.

புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும்.

இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது.

இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப்படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும்.

தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும்.

தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன.

இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.

இருப்பினும் சில விஷயங்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.

விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர்களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Sunday, January 6, 2013

* கணினி திரையில் பெயிண்ட் செய்வது எப்படி

கணினி திரையில் பெயிண்ட்

பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும் 


மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம் Fresh Paint. 
மேலோட்டமாகப் பார்த்தால், நாம் நம் விரல்களாலேயே, மானிட்டர் திரையில் படம் வரையக் கூடிய வசதிகளைத் தரும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான பிரஷ்களுடன், கலர் பேலட் ஒன்று தரப்பட்டு, படம் வரையும் அனுபவத்தினை மிக மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுகிறது. 

இதனை இயக்கிப் பார்க்கையில், இது பழைய MSPaint புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட புரோகிராம் அல்ல, முற்றிலும் புதிய புரோகிராம் எனத் தெரியவரும். இதில் நாம் படம் வரையும்போது, படம் வரையும் கேன்வாஸ் ஒன்றில், ஆயில் பெயிண்ட் கொண்டு நாமே வரையும் அனுபவத்தினை இது தருகிறது. 


இந்த புரோகிராமினைத் தர, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐந்து விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். பெயிண்ட் புரோகிராம் 


வடிவமைப்பது எளிதான ஒரு செயல் அல்ல. எண்ணிப் பாருங்கள். பெயிண்ட் பிரஷ் ஒன்றின் ஆயிரக்கணக்கான இழைகளும் தரக்கூடிய வண்ணத்தைத் திரையில் அமைக்க, எவ்வகையான குறியீடுகளை புரோகிராம் செய்திருக்க வேண்டும். 


இதனை சோதனை செய்தபோது, ஏறத்தாழ 60 ஆயிரம் பேர், சோதனை செய்து பார்த்துச் சரியான கருத்துக்களை வழங்கினார்கள். இவற்றின் அடிப்படையில், இந்த புரோகிராம் முழுமையாக்கப்பட்டு விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, அதன் சோதனை தொகுப்பில் தரப்பட்டது. இந்த புரோகிராம் குறித்து இதனைப் பயன்படுத்திப் பார்த்த மக்கள் தந்த பின்னூட்டுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன. 


புரோகிராம், அடோப் போட்டோ ஷாப் போன்ற வரைவதற்கான வசதிகள் பல கொண்ட புரோகிராம் அல்ல. ஆனால், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராம்களில், இது ஒரு தனி சிறப்பினைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டம் கம்ப்யூட்டர்களை வாங்கியவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்தால், இதனைத் தெரிந்து கொள்வார்கள்.

* ஹார்ட் டிஸ்க் பழுதாவதற்க்கான முக்கிய காரணங்கள்

ஹார்ட் டிஸ்க் பழுதாவதற்க்கான

பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும்என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான 
பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம் (defragmentation,disk cleanup). 

வன்தட்டு பழுதுயடைவதற்க்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த வழி என்று பார்ப்போம். முதலில் வன்தட்டு பழுதாகிவிட்டால் நம்முடைய தகவல் அழிந்துவிடுமா ! என்ற ஐயம் இருக்கும். பழுதாகி இருக்கும் வந்தட்டிலுள்ள தகவலை பெற சில பிரச்சனைக்கு மட்டும் Data Clinic என்ற மென்பொருள் உதவியுடன் அந்த தகவலை பெறலாம்.

எலக்டிரிக்கல் போர்டு, மோட்டார் பாகம், ப்ரோக்ராம் அடங்கிய சிப்(Hard disk firmware) ஆகியவை வன்தட்டில் இருக்கும். இவை ஹார்ட் டிஸ்க் இயங்குவதற்க்கு பயன்படுகிறது. 

ஹார்ட்டிஸ்க் பிர்ம்வேர் என்பது ஒரு வகையான ப்ரோக்ராம் அடங்கிய எம்ப்பெடெட் சிப். இது பழுதாகிவிட வாய்ப்பு உள்ளது. இவ்வகையான பிரச்சனை ஏற்பட்டால் , பழுதாக்கிய நிலையில் வன்தட்டு சரியா ஃபைல்லை குறிப்பிட முடியாது அது தவறான ஃபைல்லை சூட்டிக்காட்டும். இதனால் கூட கணினியில் ஹார்ட் டிஸ்க் பழுது என்ற செய்தியை பெறலாம். ஹார்ட்டிஸ்க் பிர்ம்வேர் பழுதாகிவிட்டால் வன்தட்டில் உள்ள தகவலை பெற Low level Language Program னை பயன்படுத்தி ரீ-ப்ரோக்ராம் செய்து பார்க்கலாம். 

எலக்டிரிக்கல் போர்டு செயல் இழந்து விட்டால் 100% தகவலை மீண்டும் வன்தட்டிலிருந்து Data Clinic என்ற மென்பொருள் உதவிடன் பெற முடியும. வன்தட்டிலுள்ள சர்க்யூட்போர்டு சார்ட்டாக வாய்ப்பு உள்ளது. இதனை BIOS-னால் கண்டறிய முடியாது. கணினியை இயக்க ஆரம்பிக்க பொழுது வன்தட்டுலுள்ள மோட்டார் சூத்தாமல் அந்த டிஸ்க் நின்றுவிடும். இதனால் கூட ஹார்ட் டிஸ்க் பழுதாகலாம். 

மெக்கானிக்கல் வழியாக பழுதாவதை பார்போம். மோட்டார் என்பதால் வன்தட்டிலுள்ள டிஸ்க்கை இயக்குவதற்க்கு இது பயன்படுகிறது. இது செயல் இழந்துவிட்டால் கணினியில் இருந்து கிளிக்கிங்க் ஒலி சிறியதாக எழும். இதிலும் முழுமையாக தகவலை வன்தட்டில் திரும்ப பெற முடியும். 
லாஜிகல் எர்ரர், இது ஒரு வகையான பிரச்சனை. இது தவறான முகவரியை ஃபைல் அல்லோகேஷன் டேபிளில்(FAT) பதித்துவிடும்.கணினி ஸ்டார்ட் ஆனாலும் கூட இந்த பிரச்சனையால் சரியான தகவலை வன்தட்டிலிருந்து பெற முடியாது. இதிலும் தகவலை மீண்டும் பெற பலவகையான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இது எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பழுதைவிட மிக கடினமானது வித்தியாசமானது கூட. 
இது தவிற மடிக்கணினி அல்லது ஹார்ட்டிஸ்க் தவறி கீழே விழுந்தால் தகவலை மீண்டும் பெற முடியாது.

* கேச் மெமரியை அதிகமாக்குவது எப்படி

கேச் மெமரியை அதிகமாக்குவது

கேச் டெம்பரரி ஸ்டோரேஜாக பயன்படும். கணினியில் ஹார்ட் டிஸ்கில் ஃபைல்களை வேகமாக பரிமாறிக்கொள்வதுக்கு இந்த மெமரி பயன்படுகிறது. விண்டோஸ் விஸ்டா ,விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம். 


ஒரு ஃபைல்ளை ஹார்ட் டிஸ்கில் காப்பி செய்து மற்றோர் இடத்தில் பேஸ்ட் செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு 
அதன்பின்னர் முதல்நினைவகத்தில்(RAM) பதிவு செய்யப்படுகிறது.மீண்டும் அதே ஃபைல்ளை காப்பி செய்தோமானல் கணினி முதலில் கேச் மெமரி பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்பட்டுகிறது. அல்லவா ! ஆனால் கடைசியாக காப்பி செய்த ஃபைல் RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.மீண்டும் ஒரு முறை கணினி கேச் மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும். இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை கேச் மெமரி பரிமாறும் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம். 

விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்யவும்.பின் ரிஜிஸ்டரி எடிட்டரில் 

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management 

LargeSystemCache ல் DWORD டை எடிட் செய்து 0 லிருந்து 1 வரை கொடுக்கவும் .இந்த மற்றம் மூலம் கச்சே மெமரியை அதிகரிக்கலாம்.

* பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?

பைல் பார்மேட் பற்றி தெரிந்து

கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.
txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை
பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rich: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில்ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவிதவேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும்இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால்வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும்பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல்புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான்இதனைத் திறக்க முடியும்.
ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட்தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்தபைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல்டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்தவகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள்கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத்திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
htm / html :ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக்கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது எனஅடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர்புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்கஇருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத்திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள்கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில்இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல்புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
2.சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும்பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச்சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும்இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அதுசுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்டஇணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சிலஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியைமிக அழகாகச் செய்து முடித்திடும்.
cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.
3.பட பைல்கள்:
விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.
psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும்உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம்அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன்பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின்அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும்புரோகிராம் http://www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.
psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொருஇமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவானபைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலைஅதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.
bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.
jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடுஇன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ்பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதிநவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ்புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர்தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.
gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும்விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.
tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம்பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில்திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்எளிமையானதாகும்.
scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்றுடிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத்தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
3.ஆடியோ பைல்கள்:
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோபைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாகஇசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியாபிளேயரும் இதனை இயக்கும்.
wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல்ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.
aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாகவெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.
ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும்துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல்வேண்டும். இதனை http://www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.
wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனைஇயக்கி ரசிக்கலாம்.
4.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:
சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக்செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்தபைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.
exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.
bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.
vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.

* Audio Editing செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள்

Audio Editing செய்வதற்கு ஓர் சிறந்த

MP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் அவற்றில் அனேகமானவற்றை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.
ஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
தவிர Converter மற்றும் CD Ripper ஆகவும் இம்மென்பொருள் தொழிற்படுகின்றது. அதாவது MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.

* புதிதாக லேப்டாப் வாங்குபவர் கவனத்திற்க்கு?

புதிதாக லேப்டாப் வாங்குபவர்

அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் 
பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது. 

டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன. 

இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் 
புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத்தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார். 

இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள். 

1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும். 

3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும். 

4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்தது டூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும். 

அடுத்ததாக டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics): என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI) வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும். 

5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம். 

6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI) போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும். 

7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம். 

சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்? 

1. கிராப் வேர்களை (crapware) நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும். 

2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும். 

மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும். 

அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம். லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.