Wednesday, November 28, 2012

* பொ‌ன்மொ‌ழிக‌ள்


01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.
02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.
03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.
04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.
05. பிறப்போடு பிறந்தது மரணம்.
06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.
07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.
08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.
09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.
10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.
11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.
12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.
13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.
14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.
15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.
16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.
17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.
18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே
19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.
20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.
21. மனிதனை வெல்பவனை விட மனித மனதை வெல்பவனே மாபெரும் கெட்டிக்காரன்.
22. பிரச்சனை சிறிதாயினும் அதைத் தீர்ப்பதில் பெரிய கவனம் செலுத்து.
23. ஏமாற்றங்களை ஏற்கும் வெற்றி மனப்பான்மை எம்மை உயர்த்தும்.
24. வாழ்க்கைத்தரம் உயர்வு பெற விவேகமான வழிகாட்டல் அவசியம்.
25. ஒரு பணக்காரன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உபவாசமிருக்க வேண்டும், ஏழையாக  வாழ்ந்து இறக்க வேண்டும்.
26. எவன் ஒருவன் இருப்பதை வைத்து திருப்திப்படுகிறானோ அவனே செல்வன் ஏனென்றால் திருப்தியே உண்மையான செல்வமாகும்.
27. ஒரு முறை சேமித்த பணம் இரு முறை உழைத்ததற்கு சமம்.
28. சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதைவிட நரகத்தில் அரசனாக இருப்பது மேல்.
29. வார்த்தைகள் இலைகள் போல அதிக இலைகள் இருக்கும் மரத்தில் பழங்கள் இருப்பதில்லை.
30. நல்ல சொல் வெகு தூரம் பயணிக்கிறது தீய சொல் அதற்கு அப்பாலும் பயணிக்கிறது.
31. பேசிய மொழியை விழுங்க முடியாது.
32. குணப்படுத்த முடியாத நோயை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
33. மனிதனை உயர்வடையச் செய்வது சோதனை நேரம்தான், வெற்றி நேரமல்ல.
34. சோம்பலாக இருப்பது முட்டாள்கள் எடுக்கும் ஓய்வாகும்.
35. சோம்பலின் விளைவு தரித்திரம் முயற்சியின் விளைவு முன்னேற்றம்.

No comments:

Post a Comment