16 வயது முதல் 22 வயதுவரை உடைய 60 சதவிகித இளைய தலைமுறையினர் காண்டம் உபயோகிப்பது எவ்வாறு என்று தெரியாமல் இருக்கின்றனர். மூன்றில் இருவருக்கு எஸ்.டி.டி எனப்படும் பாலியல் நோய் தாக்கியுள்ளது பற்றி அறியாமலேயே இருக்கின்றனர். 1200 பேரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் மூன்றில் ஒருவர் மட்டுமே உறவின் போது காண்டம் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். 25 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகிப்பதில்லையாம்.
22 வயதுடையவர்களில் 12 சதவிகிதம் பேர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்புவதாக கூறியுள்ளனர்.ஐரோப்பா கண்டத்திலேயே அதிக அளவில் டீன் ஏஜ் கர்ப்பிணிகள் உள்ள நாடாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின் பருவத்தினருக்கு பாதுகாப்பான உறவு பற்றியோ, பாலியல் நோய் பற்றியோ எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்துள்ளது. பாப் பாடகர் ஜே. எல்.எஸ் மூலம் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த சர்வே இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதுதான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இதுபோன்ற சர்வே எடுத்தால் என்னென்ன அதிர்ச்சி வெளியாகுமோ தெரியலையே?
No comments:
Post a Comment