* நீர்
மழையில் பிறக்கிறாய்.....
மலையில் பிறக்கிறாய்.....
நிலத்தில் பிறக்கிறாய்.....
மேடு பள்ளங்களை நிறைத்தாலும்
சமமாகத்தான் தெரிகிறாய்!
நீர் தான்
உயிர்களின் ஆதாரம்!
எல்லா
உயிரினங்களுக்கும் ஆகாரம்!
நிற்காமல் ஓடுவதால்
நீருக்கும் வியர்த்து போகிறது
அதனால் தான்
எல்லா நதிகளும் சங்கமிக்கும்
கடல் நீர்
கரிக்கிறது!
No comments:
Post a Comment