Wednesday, November 28, 2012

* கல்லறையே என் கருவறை

கல்லறையே என் கருவறை! - வாழ்க்கை கவிதை

மகிழ்வோடு
மறைந்திருந்தேன்
கருவறைக்குள்.

அன்னையவள் 

பொறுக்கமுடியாமல்
பிரசவித்தால்...

அன்று 

ஆரம்பித்த அழுகை
இன்றுவரை முடியவில்லை

எதையோ தேடி அலைகிறேன் 

எதுவும் கிடைக்கவில்லை...

ஒருநாள் சிரித்தால் 

ஒன்பது நாட்கள் அழுகை..

மீண்டும்.... 


மகிழ்வோடு 

மறைந்துகொண்டேன்
அதன் பேர் கல்லறையாம்!. 

No comments:

Post a Comment